“லண்டன் ஆதேஸ்” பிறந்தநாள், கற்றல் உபகரணங்களுடன் தாயகத்தில் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ)
“லண்டன் ஆதேஸ்” பிறந்தநாள், கற்றல் உபகரணங்களுடன் தாயகத்தில் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ)
##############################
புங்குடுதீவைப் பூர்வீகமாக் கொண்ட லண்டனில் அமரத்துவமடைந்த அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஷ் தம்பதிகளின் புதல்வர்களில் ஒருவரான ஆனந்தன் என அழைக்கப்படும் லண்டனில் வதியும் திரு.ஆனந்தலிங்கம் கிரிசா தம்பதிகளின் செல்வப் புதல்வன் செல்வன்.ஆதேஸ் அவர்களின் பிறந்ததினம் தாயகத்தில் சிறுவர் சிறுமிகளோடு இனிதாக இன்றைய நாளில் கொண்டாடப்பட்டது.
அத்துடன் செல்வன்.ஆதேசின் பிறந்தநாளை முன்னிட்டு நிகழ்வில் கலந்து கொண்ட குறிப்பாக மாலைநேர வகுப்புக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
நாட்டில் ஏற்பட்டுள்ள இக்கட்டான பொருளாதார சூழ்நிலையால் மிகவும் கஸ்ரத்துக்கு மத்தியில் வாழும் அக்கிராம மாணவ மாணவிகள் மாலைநேர வகுப்புக்கு செல்வதுக்கான உதவியாக “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” கல்விக்கு கரம் கொடுப்போம் எனும் திட்டத்தின் கீழ் அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டது.
மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் செயற்பாடுகளை சமூகவலைத் தளங்களில் பார்வையிட்டதன் பயனாக இன்றைய நாளில் பிறந்தநாளைக் கொண்டாடும் லண்டனில் வசிக்கும் செல்வன்.ஆதேஸ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கல்விக்கு கரம் கொடுப்போம் எனும் திட்டத்தின் கீழ் அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கும்படி செல்வன்.ஆதேஸ் அவர்களின் பெற்றோர்களான லண்டனில் வசிக்கும் திரு திருமதி ஆனந்தலிங்கம் கிரிசா தம்பதிகள் கேட்டுக் கொண்டதற்கமைய செல்வன்.ஆதேசின் பிறந்தநாள் நிகழ்வுக்கான உடனடியாக அனைத்து ஒழுங்குகளையும் மாணிக்கதாசன் நற்பணி மன்றம் மேற்கொண்டு நடாத்தி சிறப்பாக முடித்தது.
அயல்வீடுகளில் வசிக்கும் சிறுவர் சிறுமியர்கள் ஆர்வமாக கலந்து கொண்டு பிறந்தநாள் பாட்டுப் பாடி கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ந்து தத்தமது சந்தோசத்தையும், மகிழ்ச்சினையும் செல்வன்.ஆதேஸ் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தினையும் தெரிவித்தனர். அத்துடன் கலந்து கொண்ட மாணவ,மாணவிகள் அவர்களின் பெற்றோர், அக்கிராம மக்கள் என அனைவருக்கும் சிற்றுண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி இன்றைய நிகழ்வானது “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்* வேண்டுகோளுக்கு இணங்க சமூக செயற்பாட்டாளரான திருமதி பிரியங்கா எனும் திருமதி.பிரியதர்ஷினி அசோக்குமார் அவர்கள் நேரிய முறையில் ஒழுங்கமைத்து நடத்தி இருந்தார். இந்நிகழ்வில் கற்குளம் கிராம மாதர்சங்க தலைவி திருமதி. காந்தன் ராஜேஸ்வரி மற்றும் சமூக சேவையாளர்கள் திருமதி. மதன் குமுதினி திருமதி ராஜேந்தர் சாந்தா ஆகியோர் முன்னிலை வகிக்க மற்றும் கிராம மக்கள் மாணவ மாணவிகள் சிறுவர்களும் கலந்து கொண்டனர்.
இவ்வாறாக காலத்தின் தேவை கருதி உடனடியாக இந்த உதவியினை செய்ய முன் வந்த லண்டன் வாழ் ஆனந்தன் என அழைக்கப்படும் திரு.திருமதி. ஆனந்தலிங்கம் கிரிசா தம்பதிகளுக்கு தாயகத்தின் உறவுகளின் சார்பில் நன்றி கூறுவதோடு
இன்றைய நாளில் இனிய பிறந்தநாளைக் கொண்டாடும் செல்வன் ஆதேஸ் அவர்கள் தேக ஆரோக்கியத்துடன், கலைகளில், கல்வியில் சிறந்து உயர்வடையவும், சீரிய பண்புகளோடு, நல்ல மனிதமுள்ள மனிதனாக, பெற்றோருக்கு பேரும் புகழும் சேர்க்க வேண்டும் என தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் வாயார வாழ்த்தி பெருமை கொள்கிறது..
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
19.08.2024
“லண்டன் ஆதேஸ்” பிறந்தநாள், கற்றல் உபகரணங்களுடன் தாயகத்தில் கொண்டாட்டம்.. (வீடியோ)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1
§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos