;
Athirady Tamil News

லண்டன் மதுரன், கனடா ராகவி இருவரின் பிறந்ததினத்தை முன்னிட்டு சாரண மாணவர்களுக்கு அறிக்கைக் கொப்பிகள் அன்பளிப்பு.. (படங்கள், வீடியோ)

0

லண்டன் மதுரன், கனடா ராகவி இருவரின் பிறந்ததினத்தை முன்னிட்டு சாரண மாணவர்களுக்கு அறிக்கைக் கொப்பிகள் அன்பளிப்பு.. (படங்கள், வீடியோ)

புங்குடுதீவைச் சேர்ந்தவர்களும், லண்டனில் அமரத்துவமடைந்தவர்களுமான, அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஷ் பரம்பரையில் வந்துதித்த வழித்தோன்றல்களில் ஒருவரும், லண்டன் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலய நிர்வாகசபை செயலாளரும், சமூக, சமயத் தொண்டருமான பெருமதிப்புக்குரிய கண்ணன் ஐயா என அன்புடன் அழைக்கப்படும் திரு.திருமதி.கருணைலிங்கம் ஆனந்தி தம்பதிகளின் ஏகபுதல்வன் செல்வன்.மதுரன் அவர்களின் பிறந்தநாளை தாயக உறவுகளோடு இனிமையாக கொண்டாடப்பட்டது.

அதேபோல் புங்குடுதீவைப் பூர்வீகமாக் கொண்டவரும், லண்டனில் வாழ்ந்து அமரத்துவமடைந்த கொழும்பு மருதானை பிரபல வர்த்தகருமான சொக்கர் மற்றும் நாகேஷ் என அன்புடன் அழைக்கப்படும் அமரர்களான சொக்கலிங்கம் சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வி வசந்தா என அன்புடன் அழைக்கப்படும் கனடாவில் வசிக்கும் திரு திருமதி ரவி பிரேமகுமாரி தம்பதிகளின் செல்வப் புதல்வியும், திரு.கிரேக் அவர்களின் அன்பு மனைவியுமான திருமதி ராகவி கிரேக் அவர்கள் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

இவர்கள் இருவரின் பிறந்ததினமும் இருவாரத்துக்கு முன்னரே கொண்டாடிய போதிலும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தொழிற்சங்கப் பிரிவுப் பொறுப்பாளரும், முன்னாள் வவுனியா நகரசபை உறுப்பினரும், சாரண உதவி மாவட்ட ஆணையாளருமான திரு.சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, வவுனியா சாரணர்களின் வளர்ச்சியின் தேவை கருதி *அறிக்கை கொப்பிகள் அன்பளிப்பு* செய்யப்பட்டது. இதுக்கான நிதியுதவியை செல்வன் மதுரன் கருணலிங்கம், திருமதி ராகவி கிரேக் ஆகியோரின் குடும்பத்தினர் வழங்கி வைத்தனர்.

வவுனியா மாவட்டத்தில் சாரணர்களின் வளர்ச்சியின் தேவை கருதி வவுனியா ஶ்ரீ நாகராஜா வித்தியாலயத்தைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கான சாரண அறிக்கை கொப்பிகள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் அன்பளிப்பு செய்யப்பட்டது.. முதலில் சாரண மாணவர்களினால் பிறந்தநாள் கொண்டாடும் லண்டன் மதுரன், கனடா ராகவி ஆகிய இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துப்பாடி வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்வில் சாரண உதவி மாவட்ட ஆணையாளர் சு. காண்டீபன் , ஜனாதிபதி சாரணன் கெர்சோன், ஆசிரியர் மயூரி ஆகியோர் விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்கள்.

அமரர்களான சொக்கலிங்கம் நாகேஷ் பரம்பரையினர் தங்களது குடும்பத்தின் எந்தவிதமான நிகழ்வு என்றாலும் அந்நிகழ்வினை தாயக உறவுகளோடு இணைந்து கொண்டாடி உதவி செய்து வருபவர்கள் என்பதை கட்டாயம் சொல்ல வேண்டும். அதுவும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக இவர்கள் பல்வேறு வாழ்வாதார உதவிகள் மற்றும் கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற நிகழ்ச்சி திட்டத்தினூடாக தொடர்ச்சியாக உதவி செய்து வருவது சிறப்பாக குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் செல்வன் மதுரன் கருணலிங்கம், திருமதி ராகவி கிரேக் ஆகியோரின் பிறந்ததினத்துக்காக தாயக உறவுகளோடு இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு தொடர்ச்சியாக தாயக உறவுகளுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக நிதிப் பங்களிப்பினை வழங்கி வருவதற்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி மன்றம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.
12.09 2024

லண்டன் மதுரன், கனடா ராகவி இருவரின் பிறந்ததினத்தை முன்னிட்டு சாரண மாணவர்களுக்கு அறிக்கைக் கொப்பிகள் அன்பளிப்பு.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.