;
Athirady Tamil News

லண்டன் பாபு எனும் யோகியின் பிறந்தநாள், கற்றல் உபகரணங்கள் வழங்கி கொண்டாட்டம்.. (வீடியோ, படங்கள்)

0

லண்டன் பாபு எனும் யோகியின் பிறந்தநாள், கற்றல் உபகரணங்கள் வழங்கி கொண்டாட்டம்.. (வீடியோ, படங்கள்)
#########################

புங்குடுதீவை பூர்வீகமாக கொண்ட அமரர் சொக்கலிங்கம் நாகேஸ் தம்பதிகளின் இளைய மகன் பாபு அன்றில் யோகி என அழைக்கப்படும் திரு.சொக்கலிங்கம் யோகலிங்கம் அவர்களது பிறந்தநாளை அவரது மனைவி மீரா பிள்ளைகள் கோபி, தேனு ஆகியோரின் நிதிப் பங்களிப்பில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் விரும்பிக் கேட்டுக் கொண்டதற்கமைவாக இன்று வவுனியா எல்லைக் கிராமமான எல்லாப்பர்மருதங்குளத்தில் பாரதி முன்பள்ளி ஆசிரியைகளின் ஒழுங்கமைப்பில். நடைபெற்றது.

எல்லாப்பர்மருதங்குளத்தில் பாரதி முன்பள்ளி சிறுவர் சிறுமிகளோடு ஆசிரியைகளும் கலந்து கொண்டு லண்டன் வாழ் யோகி என அழைக்கப்படும் யோகலிங்கம் அவர்களை வாழ்த்திச் சென்றனர்..

பிறந்த நாள் நிகழ்வில் அனைவரும் பிறந்த நாள் பாட்டுப்பாடி கேக் வெட்டி தமது வாழ்த்துக்களை தெரிவிக்க அனைவருக்கும் கற்றல் உபகரணமாக முன்பள்ளி வகுப்புக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டு சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டது.

மேற்படி நிகழ்வானது மாணிக்கதாசன் நற்பணி மன்ற வேண்டுகோளுக்கு இணங்க ஊடகவியலாளர் திரு.வரதராசா பிரதீபன் அவர்கள் நேரிய முறையில் ஒழுங்கமைத்து இருந்த அதேவேளை, வவுனியா எல்லப்பர்மருதங்குளம் பாரதி முன்பள்ளி ஆசிரியைகளான திருமதி விஜயகுமார் பேபிசர்மிளா. திருமதி டனுசியன் கிருபாழினி அவர்களும் விருந்தினர்களாக இந்நிகழ்வில் கலந்து கொள்ள சிறப்பாக நடைபெற்றது. பிறந்த நாள் நிகழ்வுக்கு வருகை தந்தோருக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் வாழ்த்துக்களோடு வணக்கத்தையும் தெரிவித்துக் கொண்டது..

அத்தோடு இன்றைய நாளில் பிறந்த நாளினை கொண்டாடும் யோகி அவர்கள் தேசியத்தின்பால் தீவிர பற்றுக்கொண்டு, பல்வேறு சமூகப் பணிகளை முன்னின்று செய்பவர். புலம்பெயர் தேசமான லண்டனில் தாயக உறவுகளுக்கு ஏற்படும் வதிவிட பிரச்சினைகள் தொடக்கம் சட்ட சிக்கல்கள் வரை இவரின் அரசியல், சமூக பங்களிப்பு ஆளுமைகளினால் நிவர்த்தி செய்து உதவி புரிந்து வருபவர்.

இவ்வாறான சமூக நோக்குடன் செயல்படுபவரை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினர் தாயக உறவுகளுடன் இணைந்து, இன்றைய நாளில் வாழ்த்தி கௌரவித்து இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

அதேவேளை இன்றைய நிகழ்வுகளில் நிதிப் பங்களிப்பு தந்த யோகி மீரா தம்பதிகளின் பிள்ளைகளுக்கும் தாயக உறவுகளுடன் இணைந்து, மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தனது நன்றியினைத் தெரிவிக்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
20.10.2024

லண்டன் பாபு எனும் யோகியின் பிறந்தநாள், கற்றல் உபகரணங்கள் வழங்கி கொண்டாட்டம்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.