;
Athirady Tamil News

உலருணவுப் பொதிகள் வழங்கி ஓராண்டு திருமணநாளைக் கொண்டாடும் சுவிஸ் திரு.திருமதி. “ஈழதர்சன் லெவீனா” தம்பதிகள்.. (படங்கள் வீடியோ) பகுதி -2

0

உலருணவுப் பொதிகள் வழங்கி ஓராண்டு திருமணநாளைக் கொண்டாடும் சுவிஸ் திரு.திருமதி. “ஈழதர்சன் லெவீனா” தம்பதிகள்.. (படங்கள் வீடியோ) பகுதி -2
#############################

இனிய ஓராண்டு திருமண நல்வாழ்த்துக்கள்..
“ஈழதர்சன் லெவீனா”

குறையாத அன்பும்,
புரிந்து கொள்ளும் அன்பும்,
விட்டுக் கொடுக்காத
பண்பும் கொண்டு
இன்று போல் என்றும்
சந்தோசமாக இருக்க

நீங்கள் ஒருவர் மீது
ஒருவர் வைத்திருக்கும்
அன்பும் காதலும் என்று
தொடர்ந்து வளரட்டும்..!

இணைந்த இரு கரம்
அன்பில் எழுதிய காவியம்
இல்லறம்..!
இன்று போல என்றும்
இல்லறம் சிறப்பாக
இருக்க இனிய திருமண
நாள் வாழ்த்துக்கள்..!

திருமண பந்தத்தில் இணைந்து ஓராண்டுப் பூர்த்தியை முன்னிட்டு ஈழதர்சன் லெவீனா தம்பதிகள் இமை போல் வாழ்ந்து இமயம் போல் வளர்ந்து என்றும் இணை பிரியாமல் வாழ வாழ்த்துகின்றோம்.

சுவிஸில் பிறந்து, வளர்ந்து திருமண பந்தத்தில் இணைந்து ஓராண்டுப் பூர்த்தியை முன்னிட்டு தம்பதிகளான “ஈழதர்சன் லெவீனா” தம்பதிகள் வழங்கிய நிதிப் பங்களிப்பில் சங்கானைத் தள வைத்தியசாலையின் பெளதீகத் தேவைகளுள் ஒன்றான மேற்படி உபகரணங்கள் மாணிக்கதாசன் நற்பணி மன்றம் ஊடாக கடந்தவாரம் வழங்கப்பட்டதும் நீங்கள் அறிந்ததே.

தாயக பிரதேசங்களான சாவகச்சேரி, கோண்டாவில் பிரதேங்களைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகள் சுவிஸ் நாட்டில் நடைபெற்ற திருமண பந்தத்தில் இணைந்து ஓராண்டுப் பூர்த்தியை முன்னிட்டு முதல் நிகழ்வாக திரு.திருமதி ஈழதர்சன் லெவீனா தம்பதிகள் விரும்பியதுக்கு இணங்க சங்கானை பிரதேச வைத்தியசாலையின் பெளதீகத் தேவைகளுள் ஒன்றான மேற்படி உபகரணங்களை தம்பதிகளின் நிதிப்பங்களிப்பில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் வழங்கப்பட்டது நீங்கள் அறிந்ததே.

இதேவேளை சங்கானை பிரதேச வைத்தியசாலையின் மயக்க மருந்து நிபுணரான, வைத்தியர்.திருமதி காயத்திரி தனஞ்செயன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இன்றைய நாளில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மூத்த உறுப்பினரான கதிர்ஐயா அன்றில் காந்தன் எனும் கதிர்காமநாதன் அவர்களின் முயற்சியினால், சங்கானைத் தள வைத்தியசாலையின் பெளதீகத் தேவைகளுள் ஒன்றான மேற்படி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மயக்க மருந்து நிபுணரான வைத்தியர்.திருமதி காயத்திரி தனஞ்செயன் அவர்களின் நேர்த்தியான ஒழுங்கமைப்பில், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மூத்த உறுப்பினரான கதிர்ஐயா அன்றில் காந்தன் எனும் திரு.கதிர்காமநாதன், வைத்திய உதவியாளர் செல்வி. சிந்தியா சூசைதாசன், வைத்திய உதவியாளர் திரு. சிவகுமார் மயூரன் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்தனர்.

யாழ் சாவகச்சேரியைச் சேர்ந்தவர்களும் தற்போது சுவிஸ் நாட்டில் சொலத்தூண் பிரதேசத்தில் வசிப்பவர்களுமான திரு.திருமதி லெனின் எனும் செல்வபாலன், சசி எனும் மனோகரி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரன் செல்வன்.ஈழதர்சன், கோண்டாவில் குமரக்கோட்டம் பிரதேசத்தை சேர்ந்தவர்களும், சுவிஸ் நாட்டில் வசிப்பவர்களுமான திரு.திருமதி.கந்தசாமி பரமேஸ்வரி தம்பதிகளின் அன்புப்புதல்வி செல்வி. லெவீனா ஆகிய இருவருக்கும் பெற்றோரின் முன்னிலையில் திருமணம் நடைபெற்ற ஓராண்டு நாளை முன்னிட்டு இந்நிகழ்வு நடைபெற்றது நீங்கள் அறிந்ததே.

அந்தவகையில் மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக பலதரப்பட்ட சமூகப் பங்களிப்பினை தொடர்ந்து செய்து வருகின்ற திரு.திருமதி. செல்வபாலன் மனோகரி தம்பதிகளின் சிரேஷ்டபுதல்வன் செல்வன்.ஈழதர்சன் லெவீனா தம்பதிகள் ஓராண்டு திருமண நிகழ்வினை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒருங்கிணைப்பில் இரண்டாவது நிகழ்வாக பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று சிறப்பாக நடைபெற்றது.

அவ்வாறே புதுத் தம்பதிகள் தமது திருமண நாளை தாயக உறவுகளோடு கொண்டாட வேண்டி மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் கேட்டுக் கொண்டதிற்கிணங்க வவுனியா இறம்பக்குளம் கிராம சேவையாளர் பிரிவிற்கு உட்பட்ட சிறப்பாக விசேட தேவையுடையோர், நோய்வாய்ப்பட்டோர், முதியோர் எனப் பல்வேறு கிராம மக்களுக்கு மேற்படி உலருணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது. வன்னியில் உலருணவுப் பொதிகள் வழங்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டதிற்கிணங்க இரண்டாவது நிகழ்வு இன்றையதினம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதனை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் வேண்டுகோளுக்கு இணங்க ஊடகவியலாளர் திரு.வரதராசா பிரதீபன் அவர்கள் நேரிய முறையில் ஒழுங்கமைத்து இருந்த அதேவேளை, கிராம உத்தியோகத்தர் திருமதி.சுபாஷ் வபித்திரா, அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.தயாளன் தர்சிகா, சமூர்த்தி உத்தியோகத்தர் திருமதி.ஸ்ரீகுமார் கீதாஞ்சலி, சமுத்தி அமைப்புகள் பிரதிநிதிகள் உட்பட சிலரும் விருந்தினர்களாக இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

செல்வன்.ஈழதர்சன் அவர்களின் தந்தை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் எனும் புளொட் அமைப்பின் மூத்த உறுப்பினர் என்பதுடன் புளொட் சுவிஸ் கிளையின் முக்கியஸ்தர்களில் ஒருவரும் நிர்வாகப் பொறுப்பாளருமான தோழர்.லெனின் எனும் திரு.செல்வபாலன் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். தந்தையைப் போன்றே சமூகத் தொண்டில் என்றும் முன்னின்று தனயனும் செயலாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓராண்டு திருமண நாளைக் கொண்டாடும் திரு.திருமதி ஈழதர்சன் லெவீனா தம்பதிகள் சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ்வாங்கு வாழ்கவென தாயக உறவுகளோடு இணைந்து “மாணிக்கதாசன் நற்பணி மன்றமும்” வாழ்த்துகிறது.

அத்தோடு தமது ஓராண்டு திருமண நாளினை முன்னிட்டு சங்கானைத் தள வைத்தியசாலையின் பெளதீகத் தேவைகளுள் ஒன்றான உபகரணங்களை வழங்கியமைக்கும், அடுத்து வழங்கிய உலருணவுப் பொதிகளுக்காகவும் நிதிப்பங்களிப்பு செய்தமைக்காகவும் தம்பதிகளுக்கும் தாயக உறவுகளுடன் இணைந்து நன்றியுடன் வாழ்த்துக்களையும் மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
21.10.2024

உலருணவுப் பொதிகள் வழங்கி ஓராண்டு திருமணநாளைக் கொண்டாடும் சுவிஸ் திரு.திருமதி. “ஈழதர்சன் லெவீனா” தம்பதிகள்.. (வீடியோ) பகுதி -2

சங்கானை தள வைத்தியசாலைக்கு உதவிகள் புரிந்து ஓராண்டு திருமணநாளைக் கொண்டாடும் சுவிஸ் திரு.திருமதி. “ஈழதர்சன் லெவீனா” தம்பதிகள்.. (வீடியோ)

சங்கானை தள வைத்தியசாலைக்கு உதவிகள் புரிந்து ஓராண்டு திருமணநாளைக் கொண்டாடும் சுவிஸ் திரு.திருமதி. “ஈழதர்சன் லெவீனா” தம்பதிகள்.. (படங்கள் வீடியோ)

சங்கானை தள வைத்தியசாலைக்கு உதவிகள் புரிந்து ஓராண்டு திருமணநாளைக் கொண்டாடும் சுவிஸ் திரு.திருமதி. “ஈழதர்சன் லெவீனா” தம்பதிகள்.. (படங்கள் வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.