;
Athirady Tamil News

அகவை நாளில், பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கிக் கொண்டாடிய புங்குடுதீவு சுவிஸ் பிரியங்கன், மகள் ரியா.. (படங்கள், வீடியோ)

0

அகவை நாளில், பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கிக் கொண்டாடிய புங்குடுதீவு சுவிஸ் பிரியங்கன், மகள் ரியா.. (படங்கள், வீடியோ)
##############################

சிரிப்புடன் நீங்கள் சிரமத்தை கடக்கணும்..
சிறப்புடன் நீங்கள் நூறு வருஷம் வாழனும்..

குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீங்கள் வாழ்ந்திட வேண்டும்..

மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..

எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும்..

வலிமையான வரிகளால்
வாழ்த்திட தெரியவில்லை..
எனவே மனமார வாழ்த்துகின்றோம்..

புங்குடுதீவில் பிறந்து, சுவிஸ் நாட்டில் லங்கெந்தால் பிரதேசத்தில் வதிக்கும் பஞ்சன் என அன்புடன் அனைவராலும் அழைக்கப்படும் திரு.திருமதி வி.அ. பஞ்சலிங்கம் அன்னாம்பாள் தம்பதிகளின் வாரிசுகளான அவர்களின் குடும்பத்தின் மூத்த புதல்வர் திரு.பிரியங்கன், அவரது செல்லமகள் செல்வி.ரியா பிரியங்கன் ஆகியோரின் பிறந்ததினம் திரு.திருமதி வி.அ. பஞ்சலிங்கம் அன்னாம்பாள் தம்பதிகளின் நிதிப் பங்களிப்பில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக” கொண்டாடப்பட்டது.

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், அமரர்கள் வி.அருணாசலம் சின்னப்பிள்ளை ஆகியோரின் அன்புப்புதல்வன் பஞ்சன் என அன்பாக எல்லோராலும் அழைக்கப்படும் திரு.திருமதி வி.அ. பஞ்சலிங்கம் அன்னாம்பாள் தம்பதிகளின் மூத்த புதல்வன்
திரு.பிரியங்கன் தனது முப்பதாவது பிறந்ததினத்தையும், அவரது மகளான செல்வி.ரியா பிரியங்கன் அவர்களின் முதலாவது பிறந்ததினமும் திரு.திருமதி.பஞ்சலிங்கம் அன்னாம்பாள், அவரது மருமகள் திருமதி.சுபரீனா பிரியங்கன், இளையமகன் திரு.பிரவிந் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் கொண்டாடும் அதேவேளை நேற்றுமுன்தினம் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஒழுங்கமைப்பில் வவுனியா தோணிக்கல் ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் நூற்றுக்கு மேற்பட்ட ஐயப்பன் சாமிமார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு மகிழ்ச்சியோடு கொண்டாடப்பட்டது..

மேற்படி நிகழ்வில் முதலில் வவுனியா தோணிக்கல் ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் திரு.பிரியங்கன், செல்வி.ரியா பிரியங்கன் ஆகியோரும் அவர்களின் குடும்பத்தினரும் நீண்ட ஆயுளுடன் சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ விசேட பூஜைகள் நடைபெற்று, கன்னி சாமியால் நெய்வேத்தியம் எடுத்து வரப்பட்டு பிள்ளையார், அம்மன், முருகன், சிவன், ஐயப்பன், மற்றும் கருப்பண்ணசாமி ஆகியோர் நெய்வேத்தியம் படைக்கப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டு அதன் பின்னர் ஐயப்ப சுவாமி உட்பட அனைத்துக் கடவுளுக்குமான பஜனைப் பாடல்கள் பாடப்பட்டதும் நீங்கள் அறிந்ததே..

இதன் பின்னர் திரு.பிரியங்கன், செல்வி.ரியா பிரியங்கன் ஆகியோரின் பிறந்ததினத்தை முன்னிட்டு சிறுவர் சிறுமிகளால் ஆர்வமாக கலந்து கொண்டு பிறந்தநாள் பாட்டுப் பாடி சைவகேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ந்து தத்தமது சந்தோசத்தையும், மகிழ்ச்சினையும் பிறந்தநாள் வாழ்த்தினையும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து விசேட அன்னதானம் அனைத்து ஐயப்ப சுவாமிகளுக்கும் பக்தர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டதும் நீங்கள் அறிந்ததே..

சுவிஸ் நாட்டில் வசிக்கும் பிரியங்கன் அவர்களின் 30வது பிறந்த தினமும், அவரது மகள் றியா அவர்களது 01வது பிறந்தநாளை முன்னிட்டு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர் திரு.வரதராசா பிரதீபன் அவர்கள் நேரிய முறையில் ஒழுங்கமைப்பில் வவுனியா தோணிக்கல் ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் பாபு குருசாமி மற்றும் ஜசிந்தன் சாமி தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட ஐயப்பன் சாமிமார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதும் நீங்கள் அறிந்ததே..

இரண்டாவது நிகழ்வாக இன்றையதினம் பிரியங்கன் அவர்களின் 30வது பிறந்த தினமும், அவரது மகள் றியா அவர்களது 01வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது குடும்பத்தின் நிதிப் பங்களிப்பில் தாயக உறவுகளுக்கான பெறுமதியான உலருணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகளும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் வழங்கப்பட்டது.

அண்மைக்காலமாக பெய்துவரும் மழை, வெள்ளம், புயல் ஆகியவற்றின் காரணமாகவும் சிறப்பாக விசேட தேவையுடையோர், நோய்வாய்ப்பட்டோர், முதியோர் எனப் பல்வேறு கிராம மக்களுக்கு மேற்படி உலருணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

சுவிஸ் நாட்டில் வசிக்கும் பிரியங்கன் அவர்களின் 30வது பிறந்த தினமும், அவரது மகள் றியா அவர்களது 01வது பிறந்தநாளை முன்னிட்டு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர் திரு.வரதராசா பிரதீபன் அவர்கள் ஒழுங்கமைப்பில் வன்னி எல்லை பிரதேசமான வவுனியா வடக்கு பிரதேச செயலக பகுதியில் அமைந்துள்ள கற்குளம், பட்டறை பிரிந்தகுளம், கீரிசுட்டான் என்பன கிராமங்களுக்கு கிராம உத்தியோகத்தர் செல்வராசா சுபாஷ் அவர்களின் சிபாரிசின் கீழ் இருப்பது (20) பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உலர் உணவும் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கப்பட்டது.

இவ் உலர் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வில் நெடுக்கேணி கற்குளம் பிரிவிற்கான கிராம உத்தியோகத்தர் செல்வராசா சுபாஷ்,சமூர்த்தி உத்தியோகத்தர் திருநாவுக்கரசு சசிகுமார், அபிவிருத்தி உத்தியோகத்தர் மார்க்கெண்டு செந்தில்குமரன் அவர்களும் கலந்து கொண்டு உலர் உணவு பொதிகள் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி உலருணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வுக்கும் ஐயப்ப சாமிமார்களுக்கு அன்னதானத்துக்கும் நிதி உதவி வழங்கிய புங்குடுதீவை சேர்ந்தவர்களும், சுவிஸ் லங்கேந்தால் பிரதேசத்தில் வசிப்பவர்களுமான திரு.திருமதி பஞ்சலிங்கம் அன்னாம்பாள் குடும்பத்துக்கு சிலரால் நன்றி தெரிவிக்கப்பட்டது.

இன்றைய நாளில் இனிய பிறந்த நாளைக் கொண்டாடும் திரு.பிரியங்கன் அவரது மகள் செல்வி.றியா பிரியங்கன் ஆகியோர் “பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடன் வாழ்க வாழ்கவென” மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தாயகத்து உறவுகளோடு இணைந்து வாழ்த்துகிறது.

அத்தோடு மேற்படி நிகழ்வுக்கு நிதிப் பங்களிப்பு வழங்கிய திரு.பஞ்சலிங்கத்தின் குடும்பத்துக்கு மனமார்ந்த நன்றிகளையும் பயனாளர்களுடன் இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. -என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
13.12.2024

அகவை நாளில், ஐயப்ப சுவாமிகளுக்கு விசேட உணவு வழங்கிக் கொண்டாடிய, புங்குடுதீவு சுவிஸ் பிரியங்கன், மகள் ரியா.. (வீடியோ)

அகவை நாளில், ஐயப்ப சுவாமிகளுக்கு விசேட உணவு வழங்கிக் கொண்டாடிய, புங்குடுதீவு சுவிஸ் பிரியங்கன், மகள் ரியா.. (படங்கள், வீடியோ)

அகவை நாளில், ஐயப்ப சுவாமிகளுக்கு விசேட உணவு வழங்கிக் கொண்டாடிய, புங்குடுதீவு சுவிஸ் பிரியங்கன், மகள் ரியா.. (படங்கள், வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.