புங்குடுதீவு அமரர்கள் வேலாயுதயுதபிள்ளை தங்கம்மா ஆகியோரின் சிரார்த்த தினத்தில் “கற்றலுக்கான உபகரணங்கள் வழங்கும்” நிகழ்வு.. (படங்கள், வீடியோ) பகுதி- 2
புங்குடுதீவு அமரர்கள் வேலாயுதயுதபிள்ளை தங்கம்மா ஆகியோரின் சிரார்த்த தினத்தில் “கற்றலுக்கான உபகரணங்கள் வழங்கும்” நிகழ்வு.. (படங்கள், வீடியோ) பகுதி- 2
################################
ஆண்டுபல இப்புவியில் அமைதியாய் வாழ்ந்திருந்து
உறவுகளை ஆறாத்துயரில் தவிக்கவிட்டு
ஆலாலகண்டணவன் பாதமதில் வாழ
விதியின் விதிப்படி விண்ணுலகம் போனீரோ!
நல்லொழுக்க நாயகர்களாய்
பிள்ளைகளை வளர்த்தெடுத்து
அயல் வீட்டுப்பிள்ளைகளையும்
பாசத்தோடு அரவணைத்து
உறவுகள் அனைவருக்கும் பாசம் காட்டி
பாரினிலே பாசத்திற்கு உதாரணமாய்
வாழ்ந்த பெற்றோரே
உம் பிரிவினை எம்முள்ளம் எப்படித்தான் ஏற்கும்.
ஆண்டுகள் பல போனாலும் உங்கள்
நினைவுகள் அழிந்து போகாது…
புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைச் சேர்ந்த அமரர் முருகேசு வேலாயுதபிள்ளை அவர்களின் 35ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டும், அன்னாரின் துணைவியார் அமரர் திருமதி.வேலாயுதயுதபிள்ளை தங்கம்மா அவர்களின் 13ம் ஆண்டு
நினைவுநாளை முன்னிட்டும் அன்னாரின் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் சார்பாக அன்னாரின் மகளும் பிரான்ஸ் நாட்டில் வாழ்பவருமான திருமதி.சதாசிவம் பிரணவசொரூபி அவர்களின் நிதிப் பங்களிப்பில் பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு நடத்தப்பட்டது நீங்கள் அறிந்ததே..
அந்த நிகழ்வில் பயனாளிகளுடன் அவர்களின் குடும்பத்தினரும் கலந்து சிறப்பித்ததுடன், புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைச் சேர்ந்த அமரர் முருகேசு வேலாயுதபிள்ளை அவர்களின் 35ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டும், அன்னாரின் துணைவியார் அமரர் திருமதி.வேலாயுதயுதபிள்ளை தங்கம்மா அவர்களின் 13ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டும் அவர்களுக்கு முதலில் ஒரு நிமிட மௌன வணக்க அஞ்சலி செலுத்தியதுடன், மலரஞ்சலி செலுத்தப்பட்டு தொடர்ந்து தேவார பாராயணம் பாடப்பட்டு அதனைத் தொடர்ந்து பயனாளிகளுக்குமான உலருணவுப் பொதிகளும் வழங்கப்பட்டதும் நீங்கள் அறிந்ததே..
இதனைத் தொடர்ந்து புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைச் சேர்ந்த அமரர் முருகேசு வேலாயுதபிள்ளை அவர்களின் 35ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டும், அன்னாரின் துணைவியார் அமரர் திருமதி.வேலாயுதயுதபிள்ளை தங்கம்மா அவர்களின் 13ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டும் இரண்டாவது நிகழ்வாக இன்றையதினம் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
அந்த நிகழ்வானது புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைச் சேர்ந்த அமரர் முருகேசு வேலாயுதபிள்ளை அவர்களின் 35ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டும், அன்னாரின் துணைவியார் அமரர் திருமதி.வேலாயுதயுதபிள்ளை தங்கம்மா அவர்களின் 13ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டும் மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார், உறவினர்கள் சார்பாக அன்னாரின் மகளும் பிரான்ஸ் நாட்டில் வாழ்பவருமான திருமதி.சதாசிவம் பிரணவசொரூபி அவர்களின் நிதிப் பங்களிப்பில் வழங்கப்பட்டது.
மேற்படி நிகழ்வானது வவுனியா வேலங்குளம் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள வவுனியா கோயில்புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலயம் பாடசாலை மாணவ மாணவிகளுக்கு தற்போது பாடசாலைக் காலம் ஆரம்பித்துள்ள நிலையில் கற்றல் உபகரணங்கள் தேவையென பாடசாலை அதிபர் திரு. மார்க்கெண்டு அரவிந்தன் அவர்கள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் முன்வைத்த வேண்டுகோளுக்கு இணங்க ஊடகவியலாளர் திரு.வரதராசா பிரதீபன் அவர்கள் நேரிய முறையில் ஒழுங்கமைத்தார்.
இவ் நிகழ்வில் புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைச் சேர்ந்த அமரர் முருகேசு வேலாயுதபிள்ளை அவர்களின் 35ம் ஆண்டு நினைவு தினமும் அன்னாரின் துணைவியார் அமரர் திருமதி.வேலாயுதயுதபிள்ளை தங்கம்மா அவர்களின் 13ம் ஆண்டு நினைவுநாளில் அவர்களுக்கான ஆத்மா சாந்தியடைய வேண்டி ஒரு நிமிடம் மெளன அஞ்சலி நிகழ்வும் அதனை தொடர்ந்து முருகேசு வேலாயுதபிள்ளை மற்றும் துணைவியார் வேலாயுதயுதபிள்ளை தங்கம்மா அவர்களுக்கு தீபராதணை காட்டியும் அஞ்சலி செலுத்தப்பட்டத்துடன் தேவாரம் இசைக்கப்பட்டது. இவ் நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர் ஜெயசங்கர் அவர்களும் இணைந்து கொண்டு பாடசாலை பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கியிருந்தனர்.
மேற்படி நிகழ்வுக்காக நிதிப் பங்களிப்பு வழங்கிய திருமதி.சதாசிவம் பிரணவசொரூபி குடும்பத்துக்கும், இதனை முன்னின்று நெறிப்படுத்தும் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்துக்கும்” கலந்து கொண்ட மாணவ,மாணவிகள் ஆசிரியர்களினால் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் தாயக சொந்தங்களோடு இணைந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, இறையடி சேர்ந்த அமரர் முருகேசு வேலாயுதபிள்ளை அன்னாரின் துணைவியார் அமரர் திருமதி. வேலாயுதயுதபிள்ளை தங்கம்மா ஆகியோரின் ஆத்மா சாந்தியடைய எந்நாளும் இறைவனை இறைஞ்சு வேண்டுகிறோம்.
இதேவேளை அமரர் முருகேசு வேலாயுதபிள்ளை அன்னாரின் துணைவியார் அமரர் திருமதி. வேலாயுதயுதபிள்ளை தங்கம்மா ஆகியோரின் நினைவாக அக்குடும்பத்தின் விருப்பத்துக்கு இணங்க மூனறாவது நிகழ்வாக பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு நாளைமறுதினம் நடைபெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
“மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” இன, மத, பிரதேச வேறுபாடுகளை மட்டுமல்ல அரசியல் வேறுபாடுகளையும் கடந்து நடுநிலைமையுடன் அனைத்து மக்களையும் வாழ்வாதாரத்தில் முன்னேற்றவும், மற்றும் மாணவ மாணவிகளின் கல்விக்கு கரம் கொடுக்கவும் வேண்டுமெனும் ஒரே நோக்கில் செயல்பட்டு வருவதும், அதன் உயரிய நோக்கமாக “தடைகளைத் தகர்த்து சமூகத்தை உயர்த்து” எனும் குறிக்கோளில் செயலாற்றுவது நீங்கள் அறிந்ததே..
“நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்”.. என்றும்
“மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்”..
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
30.12.2024
புங்குடுதீவு அமரர்கள் வேலாயுதயுதபிள்ளை தங்கம்மா ஆகியோரின் சிரார்த்த தினத்தில் “கற்றலுக்கான உபகரணங்கள் வழங்கும்” நிகழ்வு.. (படங்கள், வீடியோ) பகுதி- 2
புங்குடுதீவு அமரர்கள் வேலாயுதயுதபிள்ளை தங்கம்மா ஆகியோரின் சிரார்த்த தினத்தில் “பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கும்” நிகழ்வு.. (வீடியோ)
புங்குடுதீவு அமரர்கள் வேலாயுதயுதபிள்ளை தங்கம்மா ஆகியோரின் சிரார்த்த தினத்தில் “பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கும்” நிகழ்வு.. (படங்கள், வீடியோ)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1
§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos