பிரான்ஸ் “ஜெயா சஸ்பாநிதியின்” பிறந்தநாளைக் கொண்டாடிய தாயக உறவுகள்.. (படங்கள்,வீடியோ)

பிரான்ஸ் “ஜெயா சஸ்பாநிதியின்” பிறந்தநாளைக் கொண்டாடிய தாயக உறவுகள்.. (படங்கள்,வீடியோ)
###################
பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் “ஜெயா அக்கா” என எல்லோரினாலும் அன்புடன் அழைக்கப்படும் திருமதி சஸ்பாநிதி ஜெயக்குமாரி அவர்களின் பிறந்தநாள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒழுங்கமைப்பில் தாயக உறவுகளினால் கொண்டாடப்பட்டது
புங்கையூரை பூர்வீகமாக கொண்ட திரு.திருமதி சொக்கர் நாகேஸ் வழித்தோன்றலும், அவர்களின் இரண்டாவது புதல்வியுமான புங்குடுதீவை பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயா அக்கா என அழைக்கப்படும் திருமதி சஸ்பாநிதி ஜெயக்குமாரி அவர்களின் பிறந்நநாள், வவுனியா கந்தபுரம் கிராம பிரிவில் அமைந்துள்ள வவுனியா கந்தபுரம் முன்பள்ளி பாடசாலையின் மாணவர்கள், சிறுவர்கள் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டு கேக் வெட்டி பிறந்த நாள் பாட்டுப்பாடி மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.
மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் வேண்டுகோளுக்கு இணங்க ஊடகவியலாளர் திரு.வரதராசா பிரதீபன் அவர்கள் நேரிய முறையில் ஒழுங்கமைபில் வவுனியா கந்தபுரம் கிராம பிரிவில் அமைந்துள்ள வவுனியா கந்தபுரம் முன்பள்ளி பாடசாலையின் ஆசிரியை திருமதி பிரதீபன் நிரோஷா அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.
அப்பிரதேச கிராம அபிவிருத்தி சங்க தலைவர் கதிரேஸ் தேவராஜ், மற்றும் வெளிச்சம் அறக்கட்டளை உறுப்பினர் நடராஜா மிலக்சன், விருந்தினர்களாக இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்து இருந்தனர்.
நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் பிறந்த நாள் சிற்றுண்டி வழங்கப்பட்டது. கற்றல் உபகாரணங்களாக சித்திரக் கொப்பிகளும், கலர் சொக்கி பெட்டிகளும், பென்சிலும் வழங்கி வைக்கப்பட்டது. இதேவேளை மேற்படி நிகழ்வுக்கான நிதிப் பங்களிப்பை திருமதி சஸ்பாநிதி ஜெயக்குமாரி அவர்களின் பிள்ளைகள் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிறந்தநாளைக் கொண்டாடும் திருமதி.ஜெயா அவர்களுக்கு தாயக உறவுகளுடன் இணைந்து “மாணிக்கதாசன் நற்பணி மன்றமும்” மனதார நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், நிதிப் பங்களிப்பு வழங்கிய அவரது பிள்ளைகளுக்கு மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
20.01.2025
பிரான்ஸ் “ஜெயா சஸ்பாநிதியின்” பிறந்தநாளைக் கொண்டாடிய தாயக உறவுகள்.. (வீடியோ)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1
§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos