*புங்குடுதீவு அம்பலவாணர் கலைப் பெருமன்றம்* புதிய நிர்வாகசபை தெரிவுக்கான பொதுக்கூட்டம்.. (முழுமையான படங்கள்)
புங்குடுதீவு அம்பலவாணர் கலைப் பெருமன்றம் 02.02.2025
இன்றையதினம் 02.02.2025 அன்று மாலை அம்பலவாணர் அரங்கில் கூட்டப்பட்ட பொதுச்சபை கூட்டத்தில் முதலில் இன்னிசை வேந்தர் பொன்.சுந்தரலிங்கம் அவர்களினால் தேவாரப்பாராயணம் பாடப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தலைவர் திரு.இலட்சுமணன் இளங்கோவன் அவர்கள் இக்கலைப் பெருமன்றத்தை ஆரம்பித்த நோக்கம், அதுக்காக பாடுபட்டவர்கள் குறிப்பாக நிதியுதவி வழங்கிய புலம்பெயர் உறவுகள், இலங்கையில் உள்ள உறவுகள் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செயலாளர் பேராசிரியர் கார்த்திகேசு குகபாலன் அவர்களினால் சென்ற பொதுக்கூட்ட அறிக்கை வாசிக்கப்பட்டு முன்மொழிந்து வழிமொழிந்து ஏற்றுக் கொள்ளப்பட்டது. தொடர்ந்து உரையாற்றிய அவர்கள் இந்த மண்டபத்தை நடத்துவதில் உள்ள கஷ்ரமான சூழ்நிலை, இலவச வகுப்புக்கான மாணவர்கள் வரவு குறைவானது, இம்மண்டபத்துக்கான பிரதேசசபையின் உதவிகள், தொடர்பாகவும் உரையாடினார்.
இதனைத் தொடர்ந்து பொருளாளர் திருலிங்கநாதன் அவர்களினால் கணக்கறிக்கை வாசிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து புதிய உயர்பீட, நிர்வாகசபை உறுப்பினர்களின் விபரங்கள் தலைவர் திரு.இலட்சுமணன் இளங்கோவன் அவர்களினால் வாசிக்கப்பட்டு இதனை ஏற்றுக் கொள்ளாதவர்கள், அன்றில் புதிதாக யாரையும் உள்வாங்க வேண்டுமெனில் அவர்களின் பெயரையும் முன்மொழியலாமெனக் கோரிக்கை வைத்து பொதுமக்களின் அபிப்பிராயத்தைக் கோரினார். இதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட அனைத்து மக்களின் விருப்பத்துக்கு இணங்க ஏகமனதாக புதிய உயர்பீட, நிர்வாகசபை முன்மொழியப்பட்டு, வழிமொழியப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
*இன்றையதினம் 02.02.2025 அன்று மாலை அம்பலவாணர் அரங்கில் கூட்டப்பட்ட பொதுச்சபை கூட்டத்தில் எதிர்கால உயர்பீட, நிர்வாகசபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டோர் விபரம்*..
போஷகர்கள்..
திரு.பொன்.சுந்தரலிங்கம் -கனடா
திரு.தம்பிப்பிள்ளை இரத்தினராசா -கனடா
திரு.பஞ்சாட்சர கிருஷ்ண ராசக் குருக்கள் -கனடா
திரு.சுப்பிரமணியம் நித்தியானந்தன் -இலங்கை
தலைவர்
திரு.இலட்சுமணன் இளங்கோவன் -இலங்கை
உபதலைவர்கள்
திரு.நல்லையா தர்மபாலன் -கனடா
திரு.கணேஷ் ஸ்ரீதரன் – இலங்கை
செயலாளர்
திரு.கார்த்திகேசு குகபாலன் -இலங்கை
உப செயலாளர்கள்
திரு.சதாசிவம் சண்முகலிங்கம் -கனடா
திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் -சுவிஸ்
பொருளாளர்
திரு.எஸ்.கே சண்முகலிங்கம் -இலங்கை
உபபொருளாளர்
திரு.சேனாதிராசா சந்திரலிங்கம் -கனடா
கணக்காய்வாளர்
திரு.கந்தவனம் மகாலிங்கம் -இலங்கை
இலங்கை மற்றும் நிர்வாகசபை உறுப்பினர்கள்
திரு.சிவகுரு திருலிங்கநாதன் -இலங்கை
செல்வி.யமுனாதேவி -இலங்கை
திருமதி.தனபாலன் சுலோசனாம்பிகை -இலங்கை
திருமதி.சிவஞானசுந்தரம் ஸ்ரீலதா -இலங்கை
திரு.தெய்வேந்திரன் வேழவேந்தன் -இலங்கை
திரு.நல்லதம்பி செல்வராசா -கனடா
திரு.முருகேசு நேமிநாதன் -லண்டன்
திரு கோபாலபிள்ளை மதிவாணன் -பிரான்ஸ்
திரு.இராசமாணிக்கம் இரவீந்திரன் -சுவிஸ்
திரு.நா.நாகராசா -இலங்கை
திரு.செல்லையா மகேந்திரன் -இலங்கை
திரு.கருணாகரன் நாவலன் -இலங்கை
திரு.வைத்திலிங்கம் -இலங்கை
திரு.சவரிமுத்து ஜெபக்குமார் -இலங்கை
திரு.கோபாலபிள்ளை அருள்தீபன் -கனடா
திரு ஏரம்பு வசந்தன் -லண்டன்
திரு.நடராஜா கோபாலகிருஷ்ணன் -கனடா
திரு.கனக ரகுநாதன் -இலங்கை
திரு.நவரட்ணசிங்கம் புவிவேந்தன் -கனடா
திரு.கனகையா செந்தூரன் -இலங்கை
திரு.சந்திரராசா விஜிதன் (ஜெகன்) -இலங்கை
திருமதி.தம்பிராசா மகேஸ்வரி -இலங்கை
திரு.சிற்றம்பலம் பரமலிங்கம் -இலங்கை
திரு.ஜெயபாலசிங்கம் காளிதாஸ் -இலங்கை
ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
அரங்குப் பொறுப்பாளர்
திருமதி.பசுபதி சுகந்தா -இலங்கை
இதனைத் தொடர்ந்து போஷகர் தம்பிப்பிள்ளை இரத்தினராசா கனடா அவர்களினால் இம்மண்டபத்தை எவ்வளவு கஸ்ரத்துக்கு மத்தியில் எல்லோரும் இணைத்து கட்டியுள்ளோம், அதனை செவ்வனவே வழி நடத்த வேண்டுமெனவும் கோரிக்கை வைத்து உரையாற்றினார்.
அதேபோல் உபசெயலாளராகத் தெரிவு செய்யப்பட்ட சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்கள் சுவிஸ் நாட்டில் இருந்து தொலைபேசி மூலம் உரையாடினார். அவரது உரையில் பல புலம்பெயர் நாடுகளில் உள்ள உறவுகள், இலங்கையில் உள்ள உறவுகள் இணைத்து இந்த மண்டபத்தை அமைத்து உள்ள போதிலும் இதனை தொடர்ந்தும் நடத்துவதில் உள்ள சிக்கல்கள், மண்டப புனரமைப்புக்கான செலவுகள் போன்றவற்றை மனதில் கொண்டு ஊரில் உள்ளோர் உட்பட அனைவரும் இணைந்து செயல்பட வேண்டுமென வினயமாகக் கேட்டுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகசபையில் தெரிவு செய்யப்பட்டவர்களில் சிலரான கணக்காய்வாளர் திரு.கந்தவனம் மகாலிங்கம் -இலங்கை, நிர்வாகசபை உறுப்பினர்களான திரு.நல்லதம்பி செல்வராசா -கனடா, திருமதி.தனபாலன் சுலோசனாம்பிகை -இலங்கை, திரு.கனக ரகுநாதன் -இலங்கை, திரு ஏரம்பு வசந்தன் -லண்டன், திரு.கனகையா செந்தூரன் -இலங்கை, ஆகியோருடன் கனடா பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு.உதயராஜா குணராஜா, கனடா பழைய மாணவர் சங்க நிர்வாகசபை உறுப்பினர் திரு.TRM தீபன், கனடாவில் இருந்து வந்த திரு.சுந்தரம்பிள்ளை கனகசிங்கம், பிரதேசசபை சார்பில் கலந்து கொண்ட திருமதி.சயந்தினி ஆகியோர் உட்பட இன்னும் சிலரின் உரை நிகழ்த்தப்பட்டது.
இறுதியாக புதிய பொருளாளரான திரு.எஸ்.கே.சண்முகலிங்கம் அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டு நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
இவ்வண்ணம்
பேராசிரியர் கார்த்திகேசு குகபாலன்.
செயலாளர்,
புங்குடுதீவு அம்பலவாணர் கலைப் பெருமன்றம்