;
Athirady Tamil News

புளொட் செயலதிபரின் பிறந்த தினத்தை முன்னிட்டு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.. -படங்கள் வீடியோ-

0

புளொட் செயலதிபரின் பிறந்த தினத்தை முன்னிட்டு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.. -படங்கள் வீடியோ-

மக்கள் எழுச்சியில் “மக்கள் போராட்டத்தின் மாபெரும் தலைவனின்” பிறந்ததினத்தில் தாயகத்தில் நினைவு கூறல்….
####################

ஈழவிடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரும், மாபெரும் மக்கள் சேனையான புளொட் எனும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஸ்தாபகரும், அதன் செயலதிபருமான மக்கள் போராட்டத்தின் மாபெரும் தளபதியான தோழர் முகுந்தன் என அறியப்பட்ட அமரர் கதிர்காமர உமாமகேஸ்வரன் அவர்களது என்பதாவது பிறந்தநாள் நினைவு, தாயகத்தில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒழுங்கமைப்பில் “புலம்பெயர் புளொட் தோழர்கள்” சிலரின் நிதிப் பங்களிப்பில், கற்றலுக்கான உபகரணங்கள் வழங்கிக் கொண்டாடப்பட்டது.

வவுனியா கிராமமொன்றில் அமரர் தோழர்.உமாமகேஸ்வரன் அவர்களது என்பதாவது பிறந்ததினம் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஏற்பாட்டில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வின் ஆரம்பத்தில் தேவார பாராயணம் பாடப்பட்டு மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் மரணித்த அனைவருக்குமான ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது.

நிகழ்வில் கலந்து கொண்ட கிராம மக்கள் சிறியோர் முதல், பெரியோர் வரை தோழர்.முகுந்தன் எனும் செயலதிபர் உமாமகேஸ்வரன் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும்முகமாக “அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டி” தீபாராதனை காடடப்பட்டு, தேவார பாராயணம் பாடப்பட்டு அஞ்சலி செலுத்தினர்.

வவுனியா நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள வவுனியா ஊர்மிளா கோட்டத்தில் வசிக்கும் மாணவ மாணவிகளுக்கு கற்றல் உபகரணங்கள் தேவையென சமூர்த்தியின் பொருளாளர் அஜிலேக்ஸ் லிக்ஷன் நிரஞ்சனா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க
ஊடகவியலாளர் திரு.வரதராசா பிரதீபன் அவர்கள் நேரிய முறையில் ஒழுங்கமைத்தார்.

இவ் நிகழ்வில் மக்களுக்காவும், மண்ணுக்காகவும் செயலாற்றிய தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செயலதிபர் தோழர் உமாமகேஸ்வரன் அவர்களின் “ஜனன தினத்தை” முன்னிட்டும் அவர்களுக்கான ஆத்மா சாந்தியடையவேண்டியும் ஒரு நிமிடம் மெளன அஞ்சலி நிகழ்வும் அதனை தொடர்ந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செயலதிபர் உமாமகேஸ்வரன் அவர்களில் படத்திற்கு தீபராதணை காட்டியும் அஞ்சலி செலுத்தப்பட்டத்துடன் தேவாரம் இசைக்கப்பட்டது.

இவ் நிகழ்வில் சமூர்த்தி தலைவி அருண் நிர்மலா, சமூர்த்தி செயலாளர் விஸ்வநாதன் செல்வரூபி அவர்களும் இணைந்து கொண்டு பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கியிருத்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா ஊர்மிளா கோட்டமானது *யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கும், மலையக மக்களுக்கும்* புளொட் உபதலைவர் மாணிக்கதாசன் அவர்களின் தலைமையில்1994 ஆம் ஆண்டு எமது புளொட் இயக்கத்தினால் மக்களுக்கு காணிகள் வழங்கப்பட்டு 11 கிராமங்களில் 385 குடும்பங்கள் குடியேற்றப்பட்டனர் அதில் ஒரு கிராமமே ஊர்மிளா கோட்டமாகும்.

மேற்படி நிகழ்வுக்கு மேற்படி “கல்விக்கு கரம் கொடுப்போம் மற்றும் வாழ்வாதார உதவி வழங்கல்” திட்டத்துக்கும், நிகழ்வுகளுக்கும் நிதிப் பங்களிக்க உள்ளோர் விபரம் கழகத்தின் (புளொட்) பிரான்ஸ் கிளை செயலாளர் தோழர்.தயாளன், சுவிஸ் தோழர்களான லெனின் எனும் செல்வபாலன், அன்ரன் எனும் லோகராஜா, ரமணன், தேவண்ணர் எனும் தவராஜா, போன்றோர் தங்களின் நிதிப் பங்களிப்பை வழங்கி இச்செயற்பாட்டுக்கு உதவி வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

எமது “கல்விக்கு கரம் கொடுப்போம், மற்றும் உதவி வழங்கல்” திட்டமானது, இவ்வாறாக காலத்தின் தேவை கருதி உடனடியாக இந்த உதவியினை செய்ய முன் வந்த புலம்பெயர் புளொட் தோழர்களுக்கு, தாயகத்தின் உறவுகளுடன் இணைந்து, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் நன்றி கூறுவதோடு,

இன்றைய நாளில் ஜனன தினத்தை காணும் அமரர்.உமாமகேஸ்வரன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என தாயக உறவுகளோடு, இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் வாயார வேண்டி பெருமை கொள்கிறது..

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்,
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
18.02.2025

புளொட் செயலதிபரின் பிறந்த தினத்தை முன்னிட்டு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.. -வீடியோ-

“புளொட்” செயலதிபர் உமாமகேஸ்வரன் குறித்த, வரலாற்றில் ஒரு பகுதி… (படங்கள்) https://www.athirady.com/tamil-news/infomation/1449717.html

“புளொட்” செயலதிபர் உமா மகேஸ்வரன் குறித்து, தளபதி மாணிக்கதாசனின் கருத்து.. (படங்கள்) https://www.athirady.com/tamil-news/infomation/1449708.தம்ள

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.