சுவிஸ் செல்வன்.ஆதி அவர்களின் பிறந்தநாள் கற்றலுக்கான உபகரணங்கள் வழங்கிக் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ)

சுவிஸ் செல்வன்.ஆதி அவர்களின் பிறந்தநாள் கற்றலுக்கான உபகரணங்கள் வழங்கிக் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ)
################################
யாழ் வேலணை மற்றும் புங்குடுதீவைச் சேர்ந்தவர்களும் தற்போது சுவிஸ் நாட்டில் வசிப்பவர்களுமான திரு.திருமதி சுதாகரன் கிருபாதேவி (செல்வி) தம்பதிகளின் செல்வப் புதல்வன் செல்வன்.ஆதி அவர்களின் இருபத்தொராவது பிறந்தநாள் விழாவினை தாயக உறவுகள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
திரு.திருமதி சுதா செல்வி தம்பதிகள் தங்களின் குடும்பத்தின் பல்வேறு நிகழ்வுகளின் மூலமாக “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக” தாயக உறவுகளுக்கு கடந்த பல வருடங்களாக உதவி செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி தாங்கள் வாழும் தேசத்திலே பல்வேறு சமய, சமூகநல அமைப்புக்களின் நிர்வாகப் பொறுப்பிலிருந்து தன்னார்வத் தொண்டுகளையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
சுவிஸ் வாழ் திரு.திருமதி. சுதா செல்வி தம்பதிகளின் ஏகபுதல்வன் செல்வன்.ஆதியின் இருபத்தொராவது பிறந்தநாள் நிகழ்வினை “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
அதேவேளை மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக பலதரப்பட்ட சமூகப் பங்களிப்பினை தொடர்ந்து செய்து வருகின்ற சுவிஸ் வாழ் திரு.திருமதி. சுதா செல்வி தம்பதிகளின் ஏகபுதல்வன் செல்வன்.ஆதியின் பிறந்தநாள் நிகழ்வினை “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஒருங்கிணைப்பில் கடந்தவாரம் எல்லைக் கிராமமொன்றில், செல்வன் ஆதி அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம், கேக் வெட்டி பிறந்தநாள் பாட்டுப்பாடி முன்பள்ளி மாணவமாணவிகள் ஒன்றுகூடி கலந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி இனிதாக கொண்டாடினர்கள். நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் செல்வன்.ஆதியின் பிறந்த நாள் கேக் உட்பட சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது
சுவிஸ் சுதா செல்வி தம்பதிகளின் ஏகபுதல்வன் செல்வன் ஆதி அவர்களின் பிறந்தநாளில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் பல்வேறு உதவிகள் மற்றும் கல்விக்கு கரம் கொடுப்போம் நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக உதவிகள் தாயக உறவுகளுக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
சுவிஸ்சில் வசிப்பிடமாகவும் கொண்ட ஆதி அவர்களின் பிறந்தநாளை வவுனியா குழந்தை இயேசு முன்பள்ளி மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டு கேக் வெட்டி பிறந்த நாள் பாட்டுப்பாடி மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.
குழந்தை இயேசு முன்பள்ளி பாடசாலை நிர்வாக தலைவர் விஸ்வலிங்கம் கருணைவாசன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஊடகவியலாளர் திரு.வரதராசா பிரதீபன் அவர்கள் நேரிய முறையில் ஒழுங்கமைபில் வவுனியா முன்பள்ளி ஆசிரியர்களான திருமதி தாசன் யாகுலநாயகி, திருமதி ஜெனிட்டோ மேரிஜான்சிகா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
தாஸ்கோட்டம் கிராம அபிவிருத்தி சங்க தலைவவி சிலலோகன் சுதர்சினி, மற்றும் பாடசாலை சிறார்களின் பெற்றோர்கள் விருந்தினர்களாக இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்து இருந்தனர்.
நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் பிறந்த நாள் சிற்றுண்டி வழங்கப்பட்டது. கற்றல் உபகரணங்களாக சித்திரக் கொப்பிகளும், கலர் சொக் பெட்டிகள், பென்சில்களும் செல்வன் ஆதியின் பெற்றோரின் நிதிப் பங்களிப்பில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய நாளில் சுவிஸ் சுதா செல்வி தம்பதிகளின் ஏகபுதல்வன் செல்வன்.ஆதியின் இனிதான பிறந்தநாளினை கொண்டாடும் வேளையில் அவரது பெற்றோர், தங்கைமார் அபி, அனு ஆகியோருடன் இணைந்து தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் வாழ்த்துவதோடு அவர்களின் நிதிப்பங்களிப்பில் நடைபெறும் சமூகநல திட்டங்கள் மேலும் தொடரவும், பல்கிப் பெருகவும் வாழ்த்துக்களையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
12.02.2025
சுவிஸ் செல்வன்.ஆதி அவர்களின் பிறந்தநாள் கற்றலுக்கான உபகரணங்கள் வழங்கிக் கொண்டாட்டம்.. (வீடியோ)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1
§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos