;
Athirady Tamil News

தாயகத்தில் முன்பள்ளிக் குழந்தைகள் இணைந்து லண்டன் மீரா பாபுவின் பொன்விழா பிறந்ததினக் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ)

0

தாயகத்தில் முன்பள்ளிக் குழந்தைகள் இணைந்து லண்டன் மீரா பாபுவின் பொன்விழா பிறந்ததினக் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ)

லண்டனில் வசிக்கும் திருமதி யோகலிங்கம் மீரா அவர்களுடைய ஐம்பதாவது பொன்விழா பிறந்தநாள் இன்றாகும் .இதனை முன்னிட்டு பிறந்தநாள் நிகழ்வு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் கொண்டாடப்பட்டது.

புங்குடுதீவை பூர்வீகமாக் கொண்ட அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஷ் பரம்பரையில் வந்துதித்த வழித்தோன்றல்களில் ஒருவரும் லண்டனில் வசிக்கும் பாபு அல்லது யோகி என அன்புடன் அழைக்கப்படும் இளைய மகனான யோகலிங்கம் அவர்களின் மனைவியும், அக்குடும்பத்தின் இளைய மருமகளுமான லண்டனில் வசிக்கும் திருமதி.மீரா யோகலிங்கம் அவர்களின் இன்றைய ஐம்பதாவது பொன்விழா பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் நிதிப் பங்களிப்பில் கிராமமொன்றில் பிறந்தநாள் கேக் வெட்டி, வாழ்த்துப் பாடி சந்தோஷமாகக் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு உட்பட அனைவருக்கும் சிற்றுண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.

லண்டனில் வசிக்கும் திருமதி.மீரா யோகலிங்கம் அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட வவுனியா வேப்பன்குளம் பாரதி சனசமூக நிலையத்தில் அமைந்துள்ள பாரதி முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

முதல் நிகழ்வாக மாணவ சிறார்களும், பெற்றோர்கள் கலந்து கொண்டு லண்டனில் வசிக்கும் மீரா அவர்களின் சார்பாக கேக் வெட்டி பிறந்த நாள் பாட்டுப்பாடி மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.

வேப்பன்குளம் பாரதி முன்பள்ளியின் மகளிர் சங்கத்தின் தலைவி திவாகர் சுபாயினி அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, மாணிக்கதாசன் நற்பணி மன்ற இணைப்பாளரும் ஊடகவியலாளருமான திரு.வரதராசா பிரதீபன் அவர்கள் நேரிய முறையில் ஒழுங்கமைபில் வவுனியா வேப்பன்குளம் பாரதி முன்பள்ளியின் ஆசிரியர் சுகந்தன் கரோஜின் தலைமையில் இடம்பெற்றது.

சிறார்களின் பெற்றோர்களும், மகளிர் சங்கத்தின் உப செயலாளர் திருமதி செல்வம் தாயினி அவர்களும், வெளிச்சம் அறக்கட்டளை தலைவர் பாக்கியநாதன் லம்போதரன் அவர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

இன்றைய நாளில் லண்டனில் தனது பிறந்த நாளைக் கொண்டாடும் திருமதி மீரா யோகலிங்கம் அவர்கள் தேக ஆரோக்கியத்துடன் நோய்நொடியின்றி சந்தோசமாக பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென தாயக உறவுகளோடு, மாணிக்கதாசன் நற்பணி மன்றம் வாழ்த்தும் அதேவேளை, மதிப்புமிகு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.
21.03 2025

தாயகத்தில் முன்பள்ளிக் குழந்தைகள் இணைந்து லண்டன் மீரா பாபுவின் பொன்விழா பிறந்ததினக் கொண்டாட்டம்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.