புங்குடுதீவு கனடா சங்கத்தின் புதிய தலைவரை கௌரவித்த முன்னாள் புங்குதீவு சுவிஸ் ஒன்றியத் தலைவர்.. (படங்கள்)
புங்குடுதீவு கனடா சங்கத்தின் புதிய தலைவரை கௌரவித்த முன்னாள் புங்குதீவு சுவிஸ் ஒன்றியத் தலைவர்.. (படங்கள்)
அண்மையில் *புங்குடுதீவு கனடா பழைய மாணவர் சங்கத் தலைவராக* புதிதாக தெரிவு செய்யப்பட்ட திரு.சசிகுமார் சண்முகநாதன் அவர்கள் குடும்ப நிகழ்வு ஒன்றின் காரணமாக, தனிப்பட்ட விஜயமாக சுவிஸ் நாட்டுக்கு இவ்வாரம் வந்திருந்த நிலையில் இன்றையதினம் *சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய முன்னாள் தலைவரான* திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களை நேரடியாக சந்தித்து உரையாடி இருந்தார்.
மேற்படி சந்திப்பில் புங்குடுதீவு பனங்கூடல் கடற்கரை சுற்றுலாத்தளம் ஷ்தாபகர் திரு.திவ்வியன் கதிர்காமநாதன் அவர்களும் கனடாவில் இருந்து வந்து இணைந்து கலந்து கொண்டு இருந்தார்.
சந்திப்பின் போது, புங்குடுதீவின் தற்போதைய நிலை, எதிர்கால செயல்பாடு, கனடா சங்கத்தால் மேற்கொள்ளவுள்ள *புங்குடுதீவு கள்ளியாறுத் திட்டம்*, ஏனைய அனைத்து நாடுகளிலும் உள்ள புங்குடுதீவு அமைப்புக்களுடன் இணைந்து ஊருக்காக செயல்படுவது போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டது.
மேற்படி சந்திப்புக் குறித்து ஊர்ப் பற்றாளரும், சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய முன்னாள் தலைவருமான திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களிடம் எமது இணையம் சார்பாக தொடர்பு கொண்டு கேட்ட போது, *இதுவோர் உறவு, நட்பு ரீதியிலான சந்திப்பு என்றும், அவர் கனடா சங்கத்தின் புதிய தலைவராக கடந்தவாரம் தெரிவு செய்யப்பட்ட நிலையில், சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்கள் சார்பாக அவரை சந்தித்துக் கௌரவித்தேன்* என்றார்.,
அத்துடன் அவர் மேலும் தெரிவிக்கையில் புதிய கனடா சங்கத் தலைவர் திரு.சசிகுமார் அவர்களுடன் உரையாடியதன் மூலம், *அவருக்கு ஊருக்கும், ஊரில் உள்ள மக்களுக்கும் நல்ல விடயங்களை செய்ய வேண்டும் என்பதுடன், கனடா சங்கத்தை நிர்வாகக் கட்டுக்கோப்பில் அதாவது எந்தவொரு விடயமும் நிர்வாகத்தின் பெரும்பான்மை அனுமதியுடன் செய்ய வேண்டும், நேரிய முறையில் செய்ய வேண்டும் போன்ற எண்ணங்களுடன் இருப்பதினால், நல்லதே நடக்குமென நம்புகிறேன்* என்றார்.
படங்கள், தகவல் -தீவகன்..