லண்டன் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலய முன்னாள் செயலாளர் புங்குடுதீவு கண்ணன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு.. (படங்கள், வீடியோ)

லண்டன் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலய முன்னாள் செயலாளர் புங்குடுதீவு கண்ணன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு.. (படங்கள், வீடியோ)
புங்கையூர் தோன்றல்களான அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஸ் தம்பதிகளின் பரம்பரையின் பொக்கிசங்களில் ஒருவரும், அக்குடும்பத்தின் மூத்தவரும், லண்டன் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலய நிர்வாகசபை முன்னாள் செயலாளரும், அறங்காவலரும், சமய, சமூகத் தொண்டருமான லண்டனில் வசிக்கும் கண்ணன் எனும் திரு.சொக்கலிங்கம் கருணைலிங்கம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது பிள்ளைகளின் நிதிப் பங்களிப்பில், வவுனியா கிராமமொன்றில், கேக் வெட்டி பிறந்தநாள் வாழ்த்துப் பாடி கொண்டாடப்பட்டதுடன், கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு அவர்களின் பெற்றோருக்கும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது.
இதேவேளை லண்டனில் வசிக்கும் கண்ணன் எனும் திரு.சொக்கலிங்கம் கருணைலிங்கம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கிராம மக்கள் விரும்பிக் கேட்டுக் கொண்டதுக்கு இணங்க நிகழ்வில் கலந்து கொண்ட அறநெறி பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு அப்பியாசக் கொப்பிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
லண்டன் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலய நிர்வாகசபை முன்னாள் செயலாளரும், அறங்காவலரும், சமய, சமூகத் தொண்டருமான லண்டனில் வசிக்கும் கண்ணன் எனும் திரு.சொக்கலிங்கம் கருணைலிங்கம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது பிள்ளைகளின் நிதிப் பங்களிப்பில், திரு.சொக்கலிங்கம் கருணைலிங்கம் அவர்களின் பிறந்தநாள் வவுனியா கணேசப்புரம் அம்மன் கோவிலின் அறநெறி கல்வி கற்கும் மாணவர்களால் இன்றையதினம் கொண்டாடப்பட்டது.
முதல் நிகழ்வாக அறநெறி மாணவர்களால், லண்டனில் வசிக்கும் திரு.சொக்கலிங்கம் கருணைலிங்கம் அவர்களின் சார்பாக கேக் வெட்டி பிறந்தநாள் பாட்டுப்பாடி மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.
வவுனியா கணேசபுரம் அம்மன் கோவிலின் அறநெறி ஆசிரியரும், வவுனியா புதுக்குளம் பாடசாலையின் சைவ நெறி ஆசிரியருமாகிய திருமதி சிவகரன் வானதி அவர்கள் ஒழுங்கமைபில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் வவுனியா மாவடட இணைப்பாளர்களில் ஒருவரும், வவுனியா ஊடகவியலாளருமான திரு.வரதராசா பிரதீபன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது
திரு.கண்ணன் ஐயாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை எமது அறநெறிப் பாடசாலை மாணவமாணவிகளுடன் இணைந்து தெரிவித்தத்துடன் திரு.கண்ணன் ஐயாவின் பிறந்தநாளை முன்னிட்டு அறநெறி மாணவமாணவிகளின் தேவைகருதி கற்றல் உபகரணமாக அப்பியாசக் கொப்பிகள் தந்துதவியமைக்கு அவருக்கு நன்றி தெரிவித்தார்கள்
மேலும் இவ் உதவித்திட்டங்களை ஏற்பாடுகளை செய்த மாணிக்கதாசன் நற்பணி மன்றத்துக்கும் நன்றிகலையும் தெரிவித்தார்கள்.
இன்றைய நாளில் பிறந்த நாளைக் கொண்டாடும் லண்டன் கண்ணன் எனும் திரு.சொக்கலிங்கம் கருணலிங்கம் அவர்கள், புங்குடுதீவு பிரபல வர்த்தகர் சொக்கர் என அழைக்கப்படும் சொக்கலிங்கம் நாகேஸ் தம்பதிகளின் மூத்த புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்களது குடும்பத்தின் எந்தவிதமான நிகழ்வு என்றாலும் அந்நிகழ்வினை தாயக உறவுகளோடு இணைந்து கொண்டாடி உதவி செய்து வருபவர்கள் என்பதை கட்டாயம் சொல்ல வேண்டும். அதுவும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக இவர்கள் பல்வேறு வாழ்வாதார மற்றும் கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற நிகழ்ச்சி திட்டத்தினூடாக தொடர்ச்சியாக உதவி செய்து வருவது சிறப்பாக குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் இவருக்கும் தாயக உறவுகளோடு இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு தொடர்ச்சியாக தாயக உறவுகளுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக நிதிப்பங்களிப்பினை வழங்கி வருவதற்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. -என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
08.04.2025
லண்டன் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலய முன்னாள் செயலாளர் புங்குடுதீவு கண்ணன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு.. (வீடியோ)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1
§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos