;
Athirady Tamil News

கனடா அமரர்.திரு. குமரையா முருகதாஸ் அவர்களின் முப்பத்தியோராம் நாள் நினைவாக விசேட நிகழ்வு.. (படங்கள், வீடியோ) -பகுதி.3

0

கனடா அமரர்.திரு. குமரையா முருகதாஸ் அவர்களின் முப்பத்தியோராம் நாள் நினைவாக விசேட நிகழ்வு.. (படங்கள், வீடியோ) -பகுதி.3

முப்பத்தியொராம் நாள் நினைவுடன் விழிநீர் அஞ்சலி

நைனாதீவை சேர்ந்தவரும் கனடாவில் அமரத்துவமடைந்தவருமான அமரர் குமரையா முருகதாஸ்

நேற்றுவரை சிரித்தபடி நிஜமாய் இருந்தவரே!
கண்மூடி விழிப்பதற்குள்
கதை முடிந்து போனதெங்கே
ஈவிரக்கமில்லா காலனவன்..
ஊதிய பலூனில் ஊசி துளைத்தது போல்
உங்கள் மறைவுச் செய்தி கேட்டு
உதிரமே உறைந்தது
நின்றவர் அழுகின்றனர்,
நினைத்துமே அழுகின்றனர்..
உள்ளத்தால் நாமெல்லாம்
எண்ணி எண்ணி அழுகின்றோம்
நித்தமும் உம் உருவம்
நினைவில் வருகையிலே
நீராண்ட மனம் எல்லாம் நிஜம்தானா???

வையகம் தன்னில் வாழ்வாங்கு வாழ்ந்து
வழிகாட்டிய எங்கள் அன்பு உறவே
உங்கள் அன்பு நினைவுகள்
எங்கள் நெஞ்சங்களிலிருந்து
என்றென்றும் மாறாது மறையாது
பாசத்தை ஊட்டி பாதிவழியில்
கைவிட்டு மீளாத்துயில் கொண்டதேனோ?
நீங்கள் மறைந்து போனாலும் உங்கள்
நினைவுகள் அழிந்து போகாது…

நைனாதீவை சேர்ந்தவரும் கனடாவில் அமரத்துவமடைந்தவருமான அமரர் குமரையா முருகதாஸ் அவர்களின் முப்பத்தியோராம் நாள் நினைவை முன்னிட்டு அன்னாரின் மனைவி, மக்கள், மருமக்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் சார்பாக அன்னாரின் குடும்பத்தினர் வழங்கிய நிதிப் பங்களிப்பில்.. முதல் நிகழ்வாக வன்னி எல்லைக் கிராமம் இரண்டில் அன்னதான நிகழ்வு பல்வேறு கிராமங்களில் இருந்து வந்து கலந்து கொண்டோரின், அஞ்சலி நிகழ்வுடன் நடைபெற்றது நீங்கள் அறிந்ததே..

இதன் முதல் நிகழ்வாக வவுனியா ஆதி விநாயகர் ஆலயத்தில் அமரர் குமரையா முருகதாஸ் அவர்களின் நினைவாக மோட்ச அர்ச்சனையும் இடபெற்றது. இதனைத் தொடர்ந்து நைனாதீவை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாக கொண்ட அமரர் குமரையா முருகதாஸ் அவர்களின் நினைவு தினத்தில் வவுனியா பாரதிபுரம் கிராம மக்களுக்கு தானத்தில் சிறந்த அன்னதானமாக விசேட சைவ உணவு வழங்கப்பட்டதும் நீங்கள் அறிந்ததே.

முதல் நிகழ்வாக அமரர் குமரையா முருகதாஸ் அவர்களின் 31வது நாள் நினைவுநாளில் அவரது ஆத்மா சாந்தியடையவேண்டியும் ஒரு நிமிடம் மெளன அஞ்சலி நிகழ்வும் அதனை தொடர்ந்து குமரையா முருகதாஸ் அவர்களில் படத்திற்கு தீபராதணை காட்டியும் அஞ்சலி செலுத்தப்பட்டத்துடன் தேவாரமும் இசைக்கப்பட்டதும்

மாணிக்கதாசன் நற்பணி மன்ற வவுனியா மாவட்ட இணைப்பாளர்களில் ஒருவரும், வவுனியா ஊடகவியலாளருமான திரு.வரதராசா பிரதீபன் அவர்கள் நேரிய முறையில் ஒழுங்கமைபில் மாணிக்கதாசன் நற்பணி மன்ற நிர்வாகசபை உறுப்பினர்களில் ஒருவரான சமூக சேவையாளர் திருமதி நவரெட்ணம் பவளராணி தலைமையில் இடம்பெற்றது. அன்னதானம் நிகழ்வில் சிறார்கள், பெரியோர்கள் கலந்து சிறப்பித்து இருந்தனர் என்பதும் நீங்கள் அறிந்ததே.

அதேபோல் இரண்டாவதாக வவுனியா சாம்பல்தோட்டம் பிள்ளையார் கோவிலில் அமரர் குமரையா முருகதாஸ் அவர்களின் நினைவாக மோட்ச அர்ச்சனையும் இடம்பெற்றதும்,

அத்துடன் நைனாதீவை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாக கொண்ட அமரர் குமரையா முருகதாஸ் அவர்களின் நினைவு தினத்தில் வவுனியா பாரதிபுரம் கிராம மக்களுக்கும், இராசேந்திரகுளத்தில் உள்ள விக்ஸ்காடு மக்களுக்கும் தானத்தில் சிறந்த அன்னதானமாக விசேட சைவ உணவு வழங்கப்பட்டது. அன்னதானம் நிகழ்வில் சிறார்கள், பெரியோர்கள் கலந்து சிறப்பித்து இருந்தனர் என்பதும் நீங்கள் அறிந்ததே..

அதனைத் தொடர்ந்து அன்னாரின் குடும்பத்தினரின் விருப்பத்துக்கு இணங்க, மட்டக்களப்பு சக்தி இல்ல மகளிர் விடுதி மாணவிகளுக்கும் மதியம், இரவு என இருவேளை விசேட சைவ உணவுகள் வழங்கப்பட்டது, இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக அமரர் குமரையா முருகதாஸ் அவர்களின் 31வது நாள் நினைவுநாளில் அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டியும் ஒரு நிமிடம் மெளன அஞ்சலி நிகழ்வும் அதனை தொடர்ந்து குமரையா முருகதாஸ் அவர்களில் படத்திற்கு தீபராதணை காட்டியும் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் தேவாரமும் இசைக்கப்பட்டது என்பதும் நீங்கள் அறிந்ததே.. மேற்படி நிகழ்வில் உயர்தரம், பல்கலைக் கழக மாணவிகளின் படங்களை தவிர்த்துள்ளோம்..

இதேவேளை அமரர் குமரையா முருகதாஸ் அவர்களின் குடும்பத்தின் விருப்பத்துக்கு இணங்க அன்னார் வாழ்ந்த இடத்திலும் செய்ய வேண்டுமெனும் கோரிக்கைக்கு இணங்க கிளிநொச்சி கோணாவில் பிரதேசத்திலும், விசேட சைவ உணவுகள் அன்னதானமாக வழங்கப்பட்டது.

நைனாதீவை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாக கொண்ட அமரர் குமரையா முருகதாஸ் அவர்களின் 31வது நாள் நினைவு நாளில் கிளிநொச்சி கோனாவில் கிராம மக்களுக்கும் தானத்தில் சிறந்த அன்னதானம் வழக்கப்பட்டது.

முதல் நிகழ்வாக அமரர் குமரையா முருகதாஸ் அவர்களின் திருஉருவப் படத்துக்கு மிகச்சிறந்த முறையில் படையலானது திரு.திருமதி. கோபிநாத் பிரஷாந்தினி அவர்களினால் படைக்கப்பட்ட்துடன், அமரர் குமரையா முருகதாஸ் அவர்களின் 31வது நாள் நினைவுநாளில் அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டியும் ஒரு நிமிடம் மெளன அஞ்சலி நிகழ்வும் அதனை தொடர்ந்து குமரையா முருகதாஸ் அவர்களில் படத்திற்கு தீபராதணை காட்டியும் அஞ்சலி செலுத்தப்பட்டத்துடன் தேவாரமும் இசைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து விசேட அன்னதானம் அக்கிராம மக்களுக்கு வழங்கப்பட்டது. தற்போதைய தேர்தல் காலம் என்பதினால் அரச கட்டிடங்களில் செய்ய அனுமதி மறுக்கப்பட்ட போதிலும், திரு.திருமதி. கோபிநாத் பிரஷாந்தினி குடும்பத்தின் வாசல் ஸ்தலத்தில் இரண்டுமூன்று பிரிவாக சிறப்பான முறையில் அன்னதானம் வழங்கப்பட்ட்து. அன்னதானம் நிகழ்வில் சிறார்கள், பெரியோர்கள் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

மேற்படி நிகழ்வானது மாணிக்கதாசன் நற்பணி மன்ற வவுனியா மாவட்ட இணைப்பாளர்களில் ஒருவரும், வவுனியா ஊடகவியலாளருமான திரு.வரதராசா பிரதீபன் அவர்கள் நேரிய முறையில் ஒழுங்கமைபில் சமூக சேவையாளர் திருமதி.கோபிநாத் பிரஷாந்தினி தலைமையில் இடம்பெற்றது.

இதேவேளை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் வழங்கப்பட்ட அன்னதான நிகழ்வின் வீடியோக் காட்சியானது அமரர் குமரையா முருகதாஸ் மகள் மருமகனான திரு.திருமதி ராசன் அவர்களின் கனடாவில் உள்ள வாசல் ஸ்தலத்தில் அமரர் குமரையா முருகதாஸ் அவர்களது 31 ஆம் நாள் நினைவாக வந்த உறவுகளுக்கும் திரையிடப்பட்டதும் விசேடமாகக் குறிப்பிடத்தக்கது.

அமரத்துவமடைந்த அமரர் குமரையா முருகதாஸ் அவர்களுக்கு தாயக உறவுகளோடு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் ஆழ்ந்த இரங்கலோடு அஞ்சலி செலுத்துவதோடு, அமரர் குமரையா முருகதாஸ் அவர்களது 31 ஆம் நாள் நினைவாக அனுஸ்டிக்கப்பட்டு, 31 ஆம் நாள் நிகழ்வுக்கு நிதிப்பங்களிப்பினை வழங்கிய அன்னாரது குடும்பத்தினருக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்,
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
05.04.2025

கனடா அமரர்.திரு. குமரையா முருகதாஸ் அவர்களின் முப்பத்தியோராம் நாள் நினைவாக விசேட நிகழ்வு.. (வீடியோ) -பகுதி.3

கனடா அமரர்.திரு. குமரையா முருகதாஸ் அவர்களின் முப்பத்தியோராம் நாள் நினைவாக விசேட நிகழ்வு.. (வீடியோ)

கனடா அமரர்.திரு. குமரையா முருகதாஸ் அவர்களின் முப்பத்தியோராம் நாள் நினைவாக விசேட நிகழ்வு.. (வீடியோ) -பகுதி.2

கனடா அமரர்.திரு. குமரையா முருகதாஸ் அவர்களின் முப்பத்தியோராம் நாள் நினைவாக விசேட நிகழ்வு.. (படங்கள், வீடியோ)

கனடா அமரர்.திரு. குமரையா முருகதாஸ் அவர்களின் முப்பத்தியோராம் நாள் நினைவாக விசேட நிகழ்வு.. (படங்கள், வீடியோ) -பகுதி.2

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.