;
Athirady Tamil News

அக்டோபரில் முதல் பொதுக்கூட்டம்.. இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முடிவு!!

0

2024 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியை எதிர்கொள்ள நாடு முழுக்க 28 எதிர்க்கட்சிகள் இணைந்து “இந்தியா” (I.N.D.I.A.) என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டணியின் மூன்று ஆலோசனை கூட்டங்கள் இதுவரை நடைபெற்றுள்ளன. இவைகளில் காங்கிரஸ், தி.மு.க., ராஷ்டிரீய ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்பட 28 எதிர்க்கட்சிகள் பங்கேற்றன. Powered By கடைசியாக மும்பையில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டது.

இதில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், பாராளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர். பாலு, தேஜஸ்வி யாதவ் மற்றும் பலர் இடம்பெற்றுள்ளனர். இந்தியா கூட்டணியின் முதல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று மதியம் டெல்லியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வீட்டில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் முதல் பொதுக் கூட்டம் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் நகரில் நடைபெறும் என்று முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் விரைவில் துவங்கும் என்றும் இந்தியா கூட்டணி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, ஊழல் மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு போன்ற விவகாரங்களை முன்னிறுத்தி தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்து இருக்கிறது. 14 பேர் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழுவில் 12 பேர் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அபிஷேக் பானர்ஜி இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்து உள்ளார்.

போபாலை தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொதுக்கூட்டங்களை நடத்த ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்து இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். “அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, பா.ஜ.க. அரசின் ஊழல் உள்ளிட்ட விவகாரங்களை முன்னிலைப்படுத்தி பொதுக் கூட்டம் நடைபெறும். இந்த குழுவில் இடம்பெற்று இருக்கும் கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தை கையில் எடுக்க ஒப்புதல் அளித்துள்ளன,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.