வவுனியாவில் 262 குடும்பங்களுக்கு விதை உழுந்து வழங்கி வைப்பு!! (படங்கள்)
சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் வவுனியாவில் 262 குடும்பங்களுக்கு விதை உழுந்து வழங்கி வைப்பு
வவுனியா பிரதேச செயலக பிரிவில் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் 262 குடும்பங்களுக்கு விதை உழுந்து வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் நா.கமலதாசன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் அவர்கள் கலந்து கொண்டு குறித்த விதை உழுந்தினை பயனாளிகளிடம் வழங்கி வைத்தார்.
கிராமிய பொருளாதாரத்தை வளப்படுத்தும் முகமாக பின்தங்கிய கிராமிய பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் அவர்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக வவுனியா பிரதேச செயலாளர் பிரிவில 262 விவசாயிகளுக்க 6 கிலோ வீதம் விதை உழுந்து வழங்கப்பட்டது. அரை ஏக்கருக்கு 6 கிலோ வீதம் காலபோக மேட்டு நில பயிற்செய்கைக்காக இவ் விதை உழுந்து வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் இணைப்பாளர் டினேஸ், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”