கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் – ஸ்காட் மாரிசனுக்கு பிரதமர் மோடி நன்றி…!!
உலகில் பல நாடுகளில் கோவிஷீல்டு உள்ளிட்ட சில தடுப்பூசிகளுக்கு மட்டுமே அங்கீகாரம் அளித்துள்ளது. பெரும்பாலான நாடுகளில் கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இதனால், கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் வெளிநாடுகளுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுகின்றனர்.
இதற்கிடையே, இந்தியாவின் கோவேக்சின் தடுப்பூசிக்கு ஆஸ்திரேலியா அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. 20 மாதத்துக்குப் பிறகு ஆஸ்திரேலியா தனது எல்லைகளை திறந்துள்ளது. அதில் கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் ஆஸ்திரேலியா வருவதற்கு அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கோவேக்சின் தடுப்பூசி
இந்நிலையில், இந்தியாவின் கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்ததற்காக ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசனுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்தற்காக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனாவுக்கு பிந்தைய நட்புறவில் இது ஒரு முக்கியமான படியாகும் என பதிவிட்டுள்ளார்.