ஒரே நாளில் 6 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு பூஸ்டர் தடுப்பூசி!!
நாட்டில் இதுவரை ஒரு கோடியே 56 இலட்சத்து 71 ஆயிரத்து 510 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.
மேலும் கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் ஒரு கோடியே 35 இலட்சத்து ஆயிரத்து 175 பேருக்கு போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும், மூன்றாவது டோஸாக செலுத்தப்படும் ஃபைசர் தடுப்பூசி இதுவரை 9,107 பேருக்கு போடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்றைய தினத்தில் (02) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு,
கொவிசீல்ட் முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் – 4,183
சைனோபார்ம் முதலாவது டோஸ் – 2,603
சைனோபார்ம் இரண்டாவது டோஸ் – 16,469
ஸ்புட்னிக் V முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
ஸ்புட்னிக் V இரண்டாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
ஃபைசர் முதலாவது டோஸ் – 42,983
ஃபைசர் இரண்டாவது டோஸ் – 985 ஃபைசர் மூன்றாவது டோஸ் – 6,320
மொடர்னா முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
மொடர்னா இரண்டாவது டோஸ் – 16