தமிழகத்திற்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு தொகை ரூ. 1,314 கோடி விடுவிப்பு…!!
மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்தியது. இதனால் பெரும்பாலான மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இழப்பை ஈடுகட்டும் வகையில் குறிப்பிட்ட வருடங்களுக்கு இழப்பீடு தொகை வழங்க மத்திய அரசு ஒப்புக்கொண்டது. அதன்படி ஜி.எஸ்.டி. இழப்பீடு தொகை வழங்கி வருகிறது.
இந்த நிலையில் இன்று 17 ஆயிரம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. இழப்பீடு தொகையை மத்திய நிதியமைச்சகம் மாநிலங்களுக்கு விடுவித்துள்ளது. இதில் தமிழகத்திற்கு 1,314.42 கோடி ரூபாய் விடுவித்துள்ளது. மகாராஷ்டிராவிற்கு அதிகபட்சமாக 3053.59 கோடி ரூபாய் விடுவித்துள்ளது. கர்நாடகாவிற்கு 1602 கோடி ரூபாய் விடுவித்துள்ளது. புதுச்சேரிக்கு 61.08 கோடி ரூபாய் விடுவித்துள்ளது.
2021-2022 நிதியாண்டில் இதுவரை 60 ஆயிரம் கோடி ரூபாய் விடுவித்துள்ளது.