வெலிகம பகுதியில் வெடிப்பு சம்பவம்!!
வெலிகம, கப்பரதொட்ட பகுதியில் உள்ள சிற்றூண்டிச்சாலை ஒன்றில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் இருவர் காயமடைந்து மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிற்றூண்டிச்சாலையின் எரிபொருள் சிலிண்டர் வெடித்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.