பாகிஸ்தான் மக்களுக்கு ஷாக் கொடுத்த மின்சார வாரியம் – பெட்ரோலை தொடர்ந்து மின் கட்டணமும் உயர்வு…!!
பாகிஸ்தான் தற்போது கூடுதல் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. சமீபத்தில் அங்கு பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது.
பெட்ரோல் விலை உயர்வு அறிவிப்புக்கு முன் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இமரான்கான், இந்தியாவில் பெட்ரோல் விலை பாகிஸ்தான் ரூபாய் மதிப்பின் படி ரூ.250க்கு விற்கப்படுகிறது. வங்காளதேசத்தில் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பின் படி ரூ.200க்கு விற்கப்படுகிறது என அண்டைநாடுகளுடன் ஒப்பிட்டுக் கூறினார்.
இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் தேசிய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்சாரத்தின் விலையை திடீரென உயர்த்தியுள்ளது. அதன்படி மின் கட்டணத்தை யூனிட்டுக்கு 1.68 ரூபாயாக உயர்த்தியுள்ளது. ஒரு யூனிட் மின்சாரத்தின் விலையை அடிப்படை கட்டணத்தின் கீழ் உள்நாட்டு நுகர்வோருக்குரூ.1.68 ஆக உயர்த்தியுள்ளது. புதிய கட்டணங்கள் நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.
இந்த புதிய கட்டண உயர்வால் மாதம் 200 யூனிட் வரை மட்டுமே மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என கூறப்பட்டுள்ளது.