;
Athirady Tamil News

நோயாளர்களை வானில் ஏற்றி வந்த சாரதி மாரடைப்பால் உயிரிழப்பு!

0

வவுனியாவில் இருந்து நோயாளர்களை யாழ்.போதனா வைத்திய சாலைக்கு வானில் ஏற்றி வந்த வான் சாரதி திடீரென மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

வவுனியா வீரபுரம் பகுதியை சேர்ந்த அன்ரன் ஜெயராஜ் (வயது 61) என்பவரே உயிரிழந்துள்ளார்.

வானில் பயணிகளை ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை , பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் திடீரென சாரதிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

உடனே அவர் வாகனத்தை வீதியோரமாக நிறுத்தியுள்ளார். பின்னர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

மாரடைப்பு ஏற்பட்டவுடன் , வீதியோரமாக வாகனத்தை நிறுத்தியமையால் , வாகனத்தில் இருந்தவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.