யாழ்.இந்துக்கல்லூரி மைதான திறப்பு விழா நாளை!! (படங்கள்)
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் விளையாட்டுத் திடல் நாளை வெள்ளிக்கிழமை காலை (12.11.2021) 9.00 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது என ஐக்கிய இராச்சிய கிளையின் தலைவர் எஸ். ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார்.
யாழ்.இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் லண்டன் கிளையினரின் கருத்திட்டத்திலும் நிதிப்பங்களிப்பிலும் உருவான விளையாட்டுத் திடல் குறித்து எஸ். ஜெயபிரகாஷ் தலைமையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு நேற்று மாலை யாழில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற போதே இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
நவீன வசதிகளுடன் 55 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டதுடன் வடமாகாணத்தில் நவீனமான அதி உயர் தரத்தில் அமைந்ததுடன் மாணவர்களின் விளையாட்டு துறையினை தேசியம் மற்றும் சர்வதேச அளவில் தரம் உயர்த்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.பாடசாலைக்கான மைதானம் என்ற வகையில் வெளிப் பாடசாலைகள் இப் புதிய திடலை பயன்படுத்த விரும்பின் பாடசாலை நிருவாகத்தினரிடம் உரிய அனுமதி பெறப்படல் வேண்டும்.
எமது மாணவர்களும் கல்வித் துறை போன்று விளையாட்டுத் துறையிலும் தேசிய போட்டிகளில் பங்குபற்ற வேண்டும் என்ற ஆவலில் உருவாக்கி உள்ளோம். தொழில் நுட்ப ரீதியாக பல விடயங்களை கையாண்டுள்ளோம்.என்றார். இவ் ஊடகச் சந்திப்பில் செயலாளர்.எஸ்.நவகரன் தற்போதைய புதிய தலைவர் கே.கிருபாகரன்.விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் சுவாமிநாதன் மற்றும் சிரேஷ்ட மாணவத் தலைவன் எஸ்.லவண் ஆகியோரும் கருத்துரைத்தமையுடன் விளையாட்டுத் திடலின் ஆரம்பம் தொடக்கம் நவீனப்படுத்தல் வரையான காணொலியும் காட்சிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”