தேசிய பட்டியலில் பெண்களுக்கு 50 சதவீத பிரதிநிதித்துவம் வேண்டும்!!
எதிர்வரும் தேர்தலில் தேசிய பட்டியலில் 50 சதவீத பிரதிநிதித்துவம் பெண்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என பிவிதுரு ஹெல உருமய பரிந்துரைத்துள்ளது.
தேர்தல் மறுசீரமைப்பிற்கான பாராளுமன்ற தெரிவுக் குழுவில் அவர்கள் இந்த பரிந்துரையை மேற்கொண்டுள்ளனர்.
அதேபோல், வேட்பாளர் பட்டியலில் 25 சதவீத பிரதிநிதித்துவம் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என பிவிதுரு ஹெல உருமய சார்பில் அமைச்சர் உதய கம்மன்பில பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுக் கூட்டம் அமைச்சர் தினேஸ் குணவர்தன தலைமையில் நேற்று இடம்பெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர், இம்முறை தேர்தல் பிரச்சாரத்தின் போதும் சுவரொட்டி தடையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அதேபோல், தேர்தலில் வேட்பாளர்கள் செலவிடும் பணத்துக்கு வரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.