51-வது ஆளுநர்கள் மாநாடு குடியரசுத் தலைவர் தலைமையில் தொடங்கியது..!!
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 51-வது ஆளுநர்கள் மாநாடு இன்று டெல்லியில் தொடங்கியது. டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்று வரும் மாநாட்டில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.
‘‘இன்று நாம் நீண்ட இடைவெளிக்கு பிறகு சுமார் 2 ஆண்டுகள் கழித்து ஆலோசனை நடத்துகிறோம். கொரோனா தொற்று நோயை எதிர்த்து போராட, கொரோனா எதிர்ப்பு போர் வீரர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றினர். தற்போது வரை இந்தியாவில் 108 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் தடுப்பூசி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது’’ என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் அனைத்து மாநில ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்கள் கலந்து கொண்டனர்.