;
Athirady Tamil News

கடற்தொழில் அமைச்சரால் புங்குடுதீவில் சிங்களவருக்கு கடலட்டை பண்ணை அனுமதி!! ( படங்கள் இணைப்பு )

0

புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் கடற்தொழில் அமைச்சினால் சிங்கள நபரொருவருக்கு முப்பது ஏக்கரில் கடலட்டை பண்ணை அமைப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது . எதிர்காலத்தில் இப்பண்ணை சீனர்களிடம் கையளிக்கப்டவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த பகுதியிலுள்ள சிறீமுருகன் கடற்தொழிலாளர் சங்கத்தின் முக்கியஸ்தர்களை ஏமாற்றியே இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதன் பின்னணியில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வேலணை பிரதேச சபை உறுப்பினரொருவர் இருப்பதாகவும் அப்பகுதி மீனவர்கள் கூறுகின்றனர்.

மேற்படி கடலட்டை பண்ணை அமைக்கப்படுமானால் இப்பகுதியிலுள்ள கடல் வளங்கள் முழுமையாக அழிக்கப்படலாமென்றும் குடும்பத்தோடு தற்கொலை செய்வதனை தவிர வேறு வழியில்லையென்றும் அம்மீனவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர் .

வேலணை பிரதேச சபையினரின் எந்தவித அனுமதியுமின்றி நடைபெறுகின்ற இச்செயற்பாடு குறித்து வேலணை பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்களான கருணாகரன் நாவலன், செல்லப்பா பார்த்தீபன், பிலிப் பிரான்சிஸ், சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டதோடு மீனவர்களின் கருத்துக்களையும் செவிமடுத்திருந்தனர்.

அத்தோடு ஊர்காவற்துறை மெலிஞ்சிமுனை கடற்தொழிலாளர் சங்க தலைவர் மடுத்தீன் பெனடிக்ற் ( சின்னமணி ) , தீவக சிவில் சமூக பொருளாளர் கருணாகரன் குணாளன் போன்றவர்களும் இங்கு வருகை தந்திருந்தனர்.

தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.