;
Athirady Tamil News

அரச ஊழியர்களுக்கு புதிய சம்பள முறைமை!

0

(1.54 pm) 2022 ஆம் நிதி ஆண்டுக்கான சமகால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்துவதற்காக, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வருகை தந்தார்.

(2.02 pm) 2022 ஆம் நிதி ஆண்டுக்கான சமகால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட நிகழ்வை ஆரம்பிப்பதற்காக சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்தார்.

(2.25 pm) 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரையை செவிமடுப்பதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்ற சபைக்கு வருகை தந்தார்.

(2.40 pm) அரச நிறுவனங்களின் செலவீனங்கள் ஒவ்வொரு காலாண்டுக்கும் தனித் தனியாக ஒதுக்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நடைமுறை சமுர்த்தி செயற்பாடுகளை நவீன மயப்படுத்த எதிர்பார்ப்பதாகவும், கிராமிய அபிவிருத்தி இயக்கமாக அதனை மாற்ற எதிர்பார்ப்பதாகவும் நிதி அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையில் காப்புறுதி கூட்டுதாபனத்தின் வணிக ரீதியான அணுகுமுறையை போட்டி நிலைமைக்கு அதனை எடுத்துச் சென்று, சகலருக்கும் பலன் கிடைக்கக் கூடிய வகையில் மாற்றுதல்….

நேரடியான வருமானத்தை ஈட்டுவதற்கு பயன்படாத சொத்துக்களை பயன்படும் வகையில் மாற்றுதல்.

நாடு முழுவதும் தொலைத்தொடர்பு கட்டமைப்பை வரைவில் நிறுவி, நாடு முழுவதிலுமுள்ள 10,115 பாடசாலைகளுக்கும் உரிய தொழிநுட்பத்தை பயன்படுத்தி, அதிவேக இணைய ப்ரோட் பேண்ட் வசதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அரச ஊழியர்களுக்கு புதிய சம்பள முறைமை ஏற்படுத்தப்படும். உற்பத்தித்திறனை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டே இது செய்யப்படுகின்றது எனவும் நிதி அமைச்சர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.