சுதந்திரம் குறித்து சர்ச்சை பேச்சு – கங்கனாவின் பத்மஸ்ரீ விருதை திரும்பப் பெற காங்கிரஸ் வலியுறுத்தல்..!!
பத்மஸ்ரீ விருது பெற்ற கங்கனா ரனாவத் தனியார் டி.வி. சேனல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், 1947ல் நம் நாடு பெற்றது சுதந்திரம் அல்ல, பிச்சை. உண்மையான சுதந்திரம் 2014ல் தான் கிடைத்தது என தெரிவித்தார்.
கங்கனா ரனாவத்தின் இந்த சர்ச்சையான பேச்சுக்கு காங்கிரஸ் உள்பட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சுதந்திரம்குறித்து அவதூறாகப் பேசிய கங்கனா ரனாவத்தின் பத்மஸ்ரீ விருதை திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆனந்த் சர்மா கூறியதாவது:ஆனந்த் சர்மா
கங்கனா ரனாவத் 1947ல் கிடைத்த சுதந்திரத்தை அவமரியாதையாகப் பேசியுள்ளார். எனவே, சமீபத்தில் அவருக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திரும்பப் பெற வேண்டும்.
மேலும், இந்த விஷயம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மவுனம் கலைக்க வேண்டும். அவர் இத்தகைய கருத்துக்களை ஆதரிக்கிறாரா என தெரியப்படுத்த வேண்டும். சுதந்திரத்தை அவமரியாதையாகப் பேசிய கங்கனா ரனாவத் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.