;
Athirady Tamil News

அனைவருக்கும் சுத்தமான குடிநீர்…!!

0

24 மணித்தியாலங்கள் முழுவதும் சுத்தமான நீரை தொடர்ச்சியாக வழங்குவதனை உறுதிப்படுத்துவதன் பொருட்டு பிரதான நீர் வழங்கல் திட்டங்களை துரிதப்படுத்துவதற்காக 2022 ஆம் ஆண்டில் வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டின் மூலம் ரூபா 33,963 மில்லியன் ஏற்பாட்டுக்கு மேலதிகமாக மேலும் ரூபா 15,000 மில்லியனை ஒதுக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை பாராளுமன்றில் இன்று சமர்ப்பித்து உரையாற்றிய நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இதனை தெரிவித்தார்.

அவர் தனது உரையில்,

பல திசைகளிலிருந்தும் சமுத்திரத்துக்கு வழிந்தோடுகின்ற பெருமளவான நீரைக்கொண்ட ஆற்றுத் தொகுதிக்கு உரிமை கோருகின்ற ஒரு நாடாகவிருக்கின்ற போதிலும் எமது நாட்டின் மக்கள் தொகையின் குறிப்பிடத்தக்க மக்கள் சுத்தமான குடிநீர் வசதிகள் இல்லாமையினால் துன்பத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

மக்கள் தொகையில் 6 சதவீதத்தினருக்கு மாத்திரமே தூய்மையான குடிநீர் வழங்கல் காணப்படுகின்றது.

அதனால் குடிநீர் தேவைப்பாட்டைப் பூர்த்தி செய்வது எம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள முன்னுரிமைப் பொறுப்பாகும். ´அனைவருக்கும் நீர்´ எனும் அரசாங்கத்தின் இலக்கை நிறைவேற்றுவதற்காக 2021 ஆம் ஆண்டில் 200,000 கிட்டிய வீடுகளுக்கு குழாய் நீர் வசதிகளை வழங்குவதனை தொடர்ந்தும் விரிவுபடுத்தி மக்கள் நீர்க்கருத ;திட்டத்தையும், நீர்த்தேக்கங்களையும் அபிவிருத்தி செய்வதற்கும் நீர் மூலங்களைப் பாதுகாப்பதற்கும் கவனம் செலுத்துகிறோம்.

அதனால் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள அத்தனகல்ல, மினுவாங்கொட, குருநாகல், கண்டி, அனுராதபுரம் வடக்கு, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி உள்ளிட்ட நீர்வழங்கல் திட்டங்களை துரிதமாக நிறைவு செய்து நாடு பூராவும் இலக்கு வைக்கப்பட்டுள்ள 3,314,500 புதிய நீரிணைப்புக்களை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

அதற்கமைவாக 24 மணித்தியாலங்கள் முழுவதும் சுத்தமான நீரை தொடர்ச்சியாக வழங்குவதனை உறுதிப்படுத்துவதற்காக ´சுபீட்சத்தின் நோக்கு´ கொள்கைப் பிரகடனத்துக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்ட ´அனைவருக்கும் நீர்´ நிகழ்ச்சித்திட்டத்தின் நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள பிரதான நீர் வழங்கல் திட்டங்களை துரிதப்படுத்துவதற்காக 2022 ஆம் ஆண்டில் வரவுசெலவுத்திட்ட மதிப்பீட்டின் மூலம் ரூபா 33,963 மில்லியன் ஏற்பாட்டுக்கு மேலதிகமாக மேலும் ரூபா 15,000 மில்லியனை ஒதுக்குவதற்கு நான் முன்மொழிக்கின்றேன்.

அதற்கமைவாக குடிநீர்த் தேவைப்பாட்டை பூர்த்தி செய்யும் 90 சதவீத இலக்கை நாம் 2024 டிசம்பர் 31 ஆம் திகதியளவில் அடைந்து கொள்வோம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.