கோவேக்சின் தடுப்பூசிக்கு பஹ்ரைன் அரசு அவசரகால அனுமதி வழங்கியது…!!
இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் தடுப்பூசியை கண்டுபிடித்தது. இந்தியாவில் கோவிஷீல்டுக்கு அடுத்தப்படியாக கோவேக்சின் தடுப்பூசி அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெளிநாடுகளுக்கும் நட்பு முறையில் இந்தியா ஏற்றுமதி செய்தது.
உலக சுகாதார மையம் கோவேக்சின் தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதியை கடந்த வாரம் வழங்கியது. இங்கிலாந்து, ஹாங்காங், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் கோவேக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான பஹ்ரைன் நாட்டில் தற்போது கொரோனா தடுப்பூசிக்கான அவசரகால அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார மையத்தின் அனுமதியைத் தொடர்ந்து பாரத் பயோடெக் நிறுவனம் அளித்த தரவுகளின் அடிப்படையில், தங்கள் நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசியை செலுத்திட அனுமதி அளிக்கப்படுகிறது என பஹ்ரைன் நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.