அதி விசேஷம் உள்ளிட்ட மதுபானங்களின் விலை அதிகரிப்பு!!
நாட்டில் உள்நாட்டு, வௌிநாட்டு மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றில் சமர்ப்பித்த வரவு செலவு திட்ட யோசனைக்கு அமைவாக இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கலால் திணைக்கள ஊடக பேச்சாளரும் கலால் ஆணையாளருமான கபில குமாரசிங்க இதனை தெரிவித்தார்.
அதன்படி, 750 மில்லி லீற்றர் உள்நாட்டு அதி விசேஷம் சாராயம் போத்தல் ஒன்று 96.14 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஏனைய உள்நாட்டு சாராயம் ஒரு போத்தலின் விலைகள் 103.73 ரூபாவாலும், வௌிநாட்டு மதுபானம் போத்தல் ஒன்று 127 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், 5% தை விட குறைவான செறிவை கொண்ட ´பீர்´ 625 மில்லிலீற்றர் போத்தல் ஒன்றின் விலை 3.10 ரூபாவாலும் மற்றும் 5% தை விட அதிகமான செறிவை கொண்ட ´பீர்´ போத்தல் ஒன்றின் விலை 14 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.