மூன்று நீர்த்தேக்கங்களின் வானகதவுகள் திறப்பு!!
நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக தெதுரு ஓயா, ராஜாங்கனை மற்றும் தப்போவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் இன்று (13) காலை திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
குறித்த நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு அதிகரித்துள்ளமையால் இவ்வாறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதன்படி, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் இரண்டு அடி வரையும், ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் இரண்டு அடி வரையும், தப்போவ நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் ஒரு அடி வரையும் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய கடமை நேர அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறித்த நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால், தெதுரு ஓயா, ராஜாங்கனை மற்றும் தப்போவ நீர்த்தேக்கங்களுக்கு அண்டிய தாழ் நிலப் பிரதேசங்களில் வசிக்கும் பொது மக்களை அவதானமாக இருக்குமாறும் அந்த அதிகாரி கேட்டுள்ளார்.
மேலும், தொடர்ச்சியாக மழை பெய்தால் குறித்த நீர்த்தேக்கங்களின் மேலதிக வான் கதவுகளும் திறக்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.