தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை ரத்து செய்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு…!!
ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 21-ந் தேதி தமிழக அரசு சட்டம் இயற்றியது.
இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜங்லி கேம்ஸ், பிளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட், கடந்த ஆகஸ்டு 3-ந் தேதி தீர்ப்பு அளித்தது.
தமிழக அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டம், அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என கூறி, சட்டத்தை ரத்து செய்தது.
இந்த நிலையில் சென்னை ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் வக்கீல் ஜோசப் அரிஸ்டாட்டில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனுவை நேற்று தாக்கல் செய்துள்ளார்.