;
Athirady Tamil News

எல்லை தாண்டிய சமயம் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்; நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!!

0

எல்லை தாண்டிய சமயம் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 23 பேரும் பயணித்த மீன் பிடிப் படகு இரண்டையும் அரச உடமையாக்குமாறும், மீனவர்களிற்கு 10 வருடத்திற்கு ஒத்திவைத்த ஒரு வருட சிறைத்தண்டனையும் விதித்து பருத்தித்துறை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி தமிழகத்தில் இருந்து இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடிக்க வந்த இரண்டு படகுகளையும் அதிலிருந்த 23 மீனவர்களையும் கைது செய்த கடற்படையினர், காரைநகர் கடற்படை முகாமில் தங்க வைத்ததோடு அவர்களின் விபரங்களை யாழ்ப்பாணம் மாவட்ட நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைத்தனர்.

இவவாறு ஒப்படைத்தவர்கள் தொடர்பான வழக்கை நீரியல்வளத் திணைக்களம் பருத்தித்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த்து.

அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த பருத்தித்துறை நீதிவான் 23 மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதோடு, அந்த வழக்கை, இன்று விசாரித்த பருத்தித்துறை நீதிவான், தமிழக மீனவர்கள் 23 பேரிற்கும் 10 வருடத்திற்கு ஒத்திவைத்த ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இதேநேரம், எல்லை தாண்டிய மீன்பிடிக்கு உபயோகித்த இரு படகுகள் மற்றும் உபகரணங்கள் அனைத்தையும் அரச உடமையாக்குமாறும் கட்டளையிட்டார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.