மதபோதகர் ஜாகீர் நாயக்கின் அமைப்பு மீதான தடை மேலும் 5 ஆண்டு நீடிப்பு…!!
மும்பையை சேர்ந்தவர் இஸ்லாமிய மத பிரசாரகர் ஜாகீர் நாயக். இவர்மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம், கிளர்ச்சியை தூண்டும்படி பேசியது ஆகிய குற்றங்களுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் கடந்த 2016-ம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறினார்.
அப்போது அவரது இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை என்ற அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. மலேசியாவில் தஞ்சமடைந்து அங்கு நிரந்தர குடியுரிமை பெற்றுள்ளார்.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகீர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை என்ற அமைப்பின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு செய்துள்ளது மத்திய அரசு.
நேற்று நடைபெற்ற மத்திய மந்திரி சபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு எதிராக அவரின் பேச்சுக்கள் இருப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.