பௌத்த அறநெறி பாடசாலைகளை திறக்க ஆலோசனை!!
இம்மாதம் 28 ஆம் திகதி முதல் அனைத்து பௌத்த அறநெறி பாடசாலைகளும் திறக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
பௌத்த மத அலுவல்கள் ஆணையாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு கல்வி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளுடன் கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய, பாடசாலைகளின் 6,7,8 மற்றும் 9 தரங்களுக்காக கல்வி நடவடிக்கைகள் இம்மாதம் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.