’பிள்ளைகளுக்கு எந்நேரத்திலும் கொரோனா பரவலாம்’ !!
ஒரு பிள்ளையிடமிருந்து மற்றொரு பிள்ளைக்குக் கொரோனா வைரஸ் பரவுவது மிகக் குறைவு என விசேட வைத்திய நிபுணர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.
பிள்ளைகளுக்கு எந்நேரத்திலும் கொரோனா வைரஸ் பரவலாம். பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் பாடசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மாணவர்கள் இனங்காணப்படலாம் எனவும் தெரிவித்தார்.
பாடசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மாணவரிடமிருந்து மற்றொரு மாணவருக்கு கொரோனா வைரஸ் பரவுவதோ அல்லது பாடசாலைகளில் கொரோனா வைரஸ் கொத்தணிகள் உருவாவதோ மிகக் குறைவு எனவும் தெரிவித்தார்.
பிள்ளைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவும்போது, அந்த வைரஸானது மற்றொரு பிள்ளைக்குப் பரவுவது மிகவும் குறைவான ஒன்று என, உலகில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதேபோல உலக சுகாதார ஸ்தாபனமும் பிள்ளைகளிடமிருந்து மற்றொரு பிள்ளைக்குக் கொரோனா வைரஸ் பரவுவது மிகக் குறைவு எனவும் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.