ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் கொட்டித்தீர்த்த மழை…!!
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ளது. கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்கள் வட கிழக்கு பருவமழையால் அதிக பயன்பெறும் மாநிலங்கள். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போதைய நிலையில் அளவைவிட அதிகமாக பெய்துள்ளது.
இன்று கர்நாடகாவில் கனமழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்யும் என்பதால் ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஏழுமலையான் கோவில் முன் மழை வெள்ளம்
ஆந்திர மாநிலம் திருப்பதியில் கனமழை பெய்தது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளமாக காட்சியளிக்கிறது. தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
இரண்டு மாநிலங்களிலும் கனமழை பெய்து வரும் நிலையில், மேட்டூர் அணைக்கு 50 ஆயிரம் கனஅடிக்கும் அதிகமான தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அதே அளவிலான நீர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.