உள்ளூர் துப்பாக்கி ஒன்று மீட்பு!!
கிளிநொச்சி, கிருஸ்ணபுரம் பகுதியில் உள்ளூர் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
இன்று பகல் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது இடியன் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிருஸ்ணபுரம் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள பாலத்தின் உட்பகுதியிலிருந்தே குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட துப்பாக்கி கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.