பைசர் கொரோனா மாத்திரையின் விலை எவ்வளவு தெரியுமா?
கொரோனா வைரஸ் தொற்று நோய் சிகிச்சைக்கான மாத்திரையை அமெரிக்காவில் உள்ள பைசர் நிறுவனம் உருவாக்கி உள்ளது.
‘பேக்ஸ்லோவிட்’ என்னும் இந்த மாத்திரையானது, வைத்தியசாலையில் சேர்க்கும் அல்லது இறப்பு நிகழும் அபாயம் உள்ள தொற்றாளர்களுக்கு லேசானது முதல் மிதமானது வரையிலான கொரோனா பாதிப்புக்கு நிவாரணம் அளிக்கும்.
வீட்டில் இருந்து சிகிச்சை பெறுகிற, அதிக ஆபத்துள்ள கொரோனா தொற்றாளர்களுக்கு இந்த மாத்திரையை பரிந்துரைக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த மாத்திரைக்கு நல்லதொரு செயல்திறன் இருப்பது பரிசோதனைகளில் தெரிய வந்துள்ளது.
இந்த மாத்திரையின் அவசர பயன்பாட்டு அங்கீகாரத்துக்கு எப்.டி.ஏ. என்னும் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் பைசர் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவுக்கு 10 மில்லியன் கொரோனா மாத்திரைகளை 5.3 பில்லியன் அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்ய இருப்பதாக பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய பண மதிப்பில் ஒரு கோடி மாத்திரைகளை 39,378.05 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்கிறது. அப்படி பார்த்தால் ஒரு மாத்திரையின் இந்திய விலை 39 ஆயிரத்து 378 ரூபாய் ஆகும்.
இலங்கை மதிப்பில் ஒரு மாத்திரையின் விலை சுமார் 107,000 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.