அட்லாண்டா விமான நிலையத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு சத்தம்: பீதியடைந்த பயணிகள்…!!
அமெரிக்காவின் அட்லாண்டா விமான நிலையத்தில் வாரத்தின் இறுதிநாட்கள் என்பதால் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை மதியம் 1.30 மணியளவில் ஏராளமான பயணிகள் குவிந்திருந்தனர். அப்போது, தடை செய்யப்பட்ட துப்பாக்கியை லக்கேஜ் பேக்கில் மறைத்து வைத்து ஒரு பயணி வந்துள்ளார்.
பேக்கை பரிசோதனை செய்யும்போது, துப்பாக்கி இருந்தது தெரியவந்துள்ளது. உடனடியாக பாதுகாப்பு அதிகாரி அந்த பேக்கை தொடக்கூடாது எனத் தெரிவித்துள்ளார். இதனால் பயந்துபோன அந்த பயணி பேக்கை திறந்து துப்பாக்கியை எடுத்துள்ளார். அதிகாரி அந்த துப்பாக்கியை அவரிடம் இருந்து கைப்பற்ற முயன்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. துப்பாக்கிச்சூடு நடைபெற்ற சத்தம் கேட்டதும், பரபரப்பாக இயங்கப்பட்ட விமான நிலையத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. விமான நிலையத்திற்கு வெளியே நின்ற மக்கள், தரையில் படுத்து அப்படியே பதுங்கினர்.
அட்லாண்டா விமான நிலையம்
இந்த கூச்சல் குழப்பத்தால் இரண்டு பயணிகள் காயம் அடைந்தனர். விமானம் சேவை நிறுத்தப்பட்டது. பின்னர்தான், துப்பாக்கிச்சூடு எதிர்பாரத விதமாக நடைபெற்ற விபத்து என்று தெரியவந்தது. சுமார் இரண்டு மணி நேரத்திற்குப்பின் விமான நிலையம் சஜக நிலையை அடைந்தது.
துப்பாக்கி வைத்திருந்த நபரை போலீசார் தேடிவருகின்றனர்.