ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு!!
வடக்கில் இடம்பெற்ற முதலாவது ‘ ஒரே நாடு ஒரே சட்டம் ‘ செயலணியின் கூட்டத்தில் கலந்துகொள்ள ஊடகங்க ளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது .
வடக்கு மாகாணத்தில், ‘ ஒரே நாடு , ஒரே சட்டம் ‘ செயலணியின் சட்டம் தொடர்பான கருத்தறியும் கூட்டம் செயலணியின் தலைவர் ஞான சாரதேரர் தலைமையில் வவுனியா மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை பிற்பகல் தொடக்கம் மாலை வரை இடம்பெற்றது .
இதன்போது அழைப்பு விடுக்கப்பட்ட சமூக மட்ட உறுப் பினர்களிடம் மட்டும் ‘ ஒரே நாடு , ஒரே சட்டம் ‘ தொடர்பான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் கேட்டறியப்பட் டன .
குறித்த கலந்துரையாடலில் செய்தி சேகரிப்பதற்கு சென்ற வவுனியா ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது .
அதேபோன்று நேற்றைய தினம் யாழில் நடைபெற்ற கூட்டத்திற்கும் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தன. கூட்டம் முடிவடைந்த பின்னரே ஊடகவியலாளர்களுக்கு செயலணி தலைவர் கருத்து தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”