வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை தொடர் மழை!!
இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் உருவாகியுள்ளதால் வடக்கு – கிழக்கு உட்பட்ட பிரதேசங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருப்பது அவசியமாகும் என யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் காலநிலை அவதானி நா.பிரதீபராஜா தெரிவித்தார்.
அவர் வெளியிட்டுள்ள காலநிலை மாற்றம் தொடர்பிலான செய்திக்குறிப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தற்போதைய நிலைமையின்படி இது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு இடைப்பட்ட பகுதியூடாகவே நிலப்பகுதிக்கு நகர்ந்து புத்தளம் மற்றும் மன்னாருக்கு இடைப்பட்ட பகுதியூடாக அரபிக் கடலுக்கு வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் எதிர்வரும் 27 ஆம் திகதி சனிக்கிழமை வரை தொடர்ச்சியாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கனமழை பெய்யும் சாத்தியமுள்ளது.
தொடர்ச்சியாக கனமழை பெய்யும் சாத்தியம் உள்ளதால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருப்பது அவசியமாகும்.
மேலும் மீனவர்கள் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை கடலுக்கு செல்வதை தவிர்க்கவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”