அரச ஊழியர்களுக்கு இடைக்கால கொடுப்பனவு?
அரச ஊழியர்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்கு இடைக்கால கொடுப்பனவு ஒன்றை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
2022ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், அரச ஊழியர்கள் நாட்டுக்கு சுமை என்று நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்திருந்த கருத்துத் தொடர்பில் சபையில் பேசப்பட்டது. உண்மைதான் பெற்றோர்களுக்கு பிள்ளைகள் சுமைதான். ஆனால் சுமை என்பதற்காக பிள்ளைகளை தூக்கியெறிவது இல்லை எனவும் தெரிவித்தார்.
அரச ஊழியர்கள் சுமை என்று கூறியதால், அரச ஊழியர்கள் தூக்கியெறிப்படுவார்கள் என்று நினைப்பது தவறு. கொரோனா வைரஸால் நாட்டை இயல்பாக நிர்வகிக் முடியவில்லை. அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று எந்நேரமும் பேசுவதில் பயனில்லை. நாட்டின் நிலைமைகள் தொடர்பில் சிந்தியுங்கள் என்றார்.
உண்மையில் அனைவரும் பெரும் சிரரமான நிலையில் வாழ்ந்து வருகிறோம். சம்பளத்தை பெறுபவர்கள் மிகவும் சிரமத்துக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இவ்வாறான நிலையில் அரச ஊழியர்களுக்கு இடைக்கால கொடுப்பனவை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் ஆராய வேண்டும். எனினும் அரசாங்கத்தின் வருமானம் குறைடைவந்துள்ளது என்றார்.