ஆயுத வழக்கில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை ஆன நபர்…!!!
உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகரில் கடந்த 1995ம் ஆண்டு சலாஹூதீன் என்பவர் மீது ஆயுத சட்டத்தின்கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் முசாபர்நகர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சலாஹூதீனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்றது.
சலாஹூதீனிடம் இருந்து 4 துப்பாக்கி கேட்ரிட்ஜ்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் அவர் மீது ஆயுத சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் தன்னை பொய்யாக சிக்க வைத்ததாக சலாஹூதீன் தரப்பில் வாதிடப்பட்டது.
நீண்ட காலமாக இழுத்தடித்த இந்த வழக்கில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, சலாஹூதீனை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார். சலாஹூதீன் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கவும், சாட்சியை வழங்கவும் அரசு தவறிவிட்டதாக நீதிபதி தெரிவித்தார்.