;
Athirady Tamil News

ஊடகவியலாளர் தாக்கப்பட்டமை தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை!!

0

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு தலைமை போலீஸ் பரிசோதகரிடமும் 59 வது படைப்பிரிவின் கட்டளை தளபதியிடமும் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவின் வடபிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் தெரிவிக்கையில் ,

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் சுயாதீன ஊடகவியலாளரான விஸ்வச்சந்திரன் என்ற ஊடகவியலாளர் தாக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்திகளை அடிப்படையாக கொண்டு 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இழக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரிவு 14 கீழ் சொந்த பிரேரணையாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் முல்லைத்தீவு தலைமை போலீஸ் பரிசோதகரிடமும் 59 வது படைப்பிரிவின் கட்டளை தளபதியிடமும் சம்பவம் தொடர்பான அறிக்கை கோரப்பட்டன.

மேலும் காயமடைந்த ஊடகவியலாளரிடமும் வாக்குமூலம் பெறுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

முல்லைத்தீவு ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.