80 உறுப்பினர்கள் சபையில் இருப்பது கட்டாயம் !!
2022ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தொடர்பான குழுநிலை விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில்,தினமும் குறித்த விவாதங்களில் ஆளுங்கட்சியின் உறுப்பினர்கள், 80 பேர் கட்டாயமாக சபையில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய. குழு நிலை விவாதம் நடைபெறும் அந்தந்த தினங்களில் ஆளுங்கட்சியின் எந்தெந்த உறுப்பினர்கள் சபையில் இருக்க வேண்டும் என்பது குறித்து, பெயர் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு, அவர்களுக்கான கடிதங்கள் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலும் குழு நிலை விவாதம் நடைபெறும் சந்தர்ப்பங்களில் அன்றைய தினம் விவாதத்தில் கலந்துகொள்ளும் உறுப்பினர்கள் மாத்திரமே சபையில் இருக்கும் நிலையை மாற்றவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.