Omigron வைரஸ் கனடாவில் இருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது…!!
இதுவரை அறியப்பட்ட கொரோனா வகைகளை விட அதிக தீவிரமாகப் பரவும் திறன் கொண்டதாக அஞ்சப்படும் ஒமிக்ரோன் வகை கொரோனா மேலும் பல நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட அந்த வகை கொரோனா பரவுவதைத் தடுப்பதற்காக உலகின் பல்வேறு நாடுகள் பயணத் தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அறிவித்து வரும் சூழலில், ஒமிக்ரோன் பரவியுள்ள நாடுகளின் பட்டியலில் புதிய நாடுகள் இணைந்து வருகின்றன.
ஏற்கெனவே பெல்ஜியம், இஸ்ரேல், ஹாங்காங் ஆகிய நாடுகளுக்கு வெளிநாடுகளிலிருந்து வந்தவா்களிடம் ஒமிக்ரோன் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், பிரிட்டன், ஜொ்மனி, இத்தாலி ஆகியவையும் தங்கள் நாட்டுக்கு வந்துள்ளவா்களுக்கு அந்த வகை கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக சனிக்கிழமை தெரிவித்தன.
இந்நிலையில் ஒமிக்ரோன் வகை கொரோனா இதுவரை 2 பேருக்கு கனடா நாட்டில் பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.