;
Athirady Tamil News

தெல்லிப்பழையில் 41 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி!!

0

நேற்று ஞாயிற்றுக்கிழமை(28.11.2021) காலை-08.30 மணி முதல் இன்று திங்கட்கிழமை(29.11.2021) காலை-08.30 மணி வரையான 24 மணித்தியாலங்களில் யாழ்.மாவட்டத்தில் தெல்லிப்பழையில் 41.0 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் திருநெல்வேலி வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்தார்.

மேற்படி காலப் பகுதியில் அச்சுவேலியில் 31.4 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் பருத்தித்துறை, சாவகச்சேரி, திருநெல்வேலி, நயினாதீவு, நெடுந்தீவு உள்ளிட்ட பகுதிகளில் 30 மில்லிமீற்றருக்கும் குறைவான மழைவீழ்ச்சியே பதிவாகியுள்ளது எனவும் அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.