இலங்கையில் ஒமிக்ரோன் தொடர்பில் துரிதப்படுத்தப்பட்ட பணிகள்!!
ஒமிக்ரோன் கொவிட் வைரஸ் அடையாளம் காண இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பரிசோதனை பணிகள் துரிதப்படுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு “மரபணு பகுப்பாய்வு” முறை பயன்படுத்தப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அதனடிப்படையில் நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டவர்கள் மற்றும் இலங்கையர்களின் மாதிரிகள் பரிசோதனையை துரிதப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் குறித்த மரபணு பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.